திருவண்ணாமலை, ஜுலை 15- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலகம் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இதன் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர். குழந்தை அழும் சத்தம் கேட்டு அங்கு பணிக்கு வந்த பெண்கள் சென்று பார்த்த போது குழந்தை ஒன்று தனியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை மீட்டு கிழக்கு காவல் நிலையத்திற்கு தக வல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந் தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தையை வீசிச்சென் றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசி டிவியையும் ஆய்வு செய்து வரு கின்றனர்.