திருவண்ணாமலை, பிப். 29- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி யில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட காய்கறி அங்கா டியை இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். ஆரணியில் உள்ள காய் கறி அங்காடி மிகவும் பழுத டைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையில் சில கடைகள் இடிந்து விழுந் தன. இதைத் தொடர்ந்து, காய்கறி அங்காடியினர் புதிய கட்டடம் கட்ட வேண் டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அரசு, தனியார் பங்க ளிப்புடன் வடிவமைப்பு கட்டுமானம் நிதி இயக்குதல் மற்றும் பராமரிப்பு அடிப்ப டையில் ரூ.2.50 கோடியில் 144 கடைகள் கொண்ட அங்காடி கட்டப்பட்டு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்த சாமி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு காய்கறி அங்காடி யைத் திறந்துவைத்தார். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, நகராட்சி மண்டல இயக்கு நர் சி.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.