tamilnadu

img

நிலுவைத் தொகை கேட்டு குடும்பத்துடன் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூர், ஆக. 20-  திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கும் உரிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு உத்தர விடப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை  ஊராட்சி ஒன்றியங்கள்  நிறைவேற்றவில்லை.   இதனை கண்டித்தும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும்  எல்லாபுரம் பிடிஒ அலுவலகத்தில் தொழிலாளர்கள் செவ்வாயன்று (ஆக.20) குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், எல்லாபுரம் பிடிஒ வெங்கடேசன், 45 தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக நிலுவை தொகைக்கான காசோலை வழங்கினார்.  மேலும், பணியின் போது உயிரிழந்த காக்கவாக்கம் சங்கர் குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூ.5600 முதல் தவணையாக அவரது மனைவியிடம் வழக்கப்பட்டது.  இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜே.ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஜி.சம்பத், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி, விதொச வட்டச் செயலாளர் பி.அருள், ஒன்றிய நிர்வாகிகள் குடியரசு, பழனி, ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.