கோவை, மார்ச் 10- எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து வியாழனன்று எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை திருச்சி சாலையிலுள்ள எல்ஐசி பகுதி அலுவலகத்தின் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வி.சுரேஷ், துளசிதரன் உள்ளிட்ட திரளான ஊழி யர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று, கோவை மாவட்டத்தில் சிங் காநல்லூர் கிளை, அவிநாசி சாலை கிளை, 100 அடி சாலை கிளை, டாடா பாத் கிளை, வடகோவை கிளை, ஆர்.எஸ்.புரம் கிளை, போத்தனூர் கிளை மற்றும் மாவட்டங்களில் அமைந் துள்ள அனைத்து கிளைகளின் முன் பாகவும் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி
தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கோட்ட இணைச்செயலாளர் ஏ. மாதேஸ்வரன், கிளை செயலாளர் சந்தி ரமெளலி, பொருளாளர் நடராஜன், முக வர்கள் சங்க கிளை தலைவர் மந்திரி, எல்ஐசிஏஒஐ கோட்ட செயலாளர் சிவ மணி, எல்ஐசி ஓய்வூதியர் சங்க நிர்வாகி சோமசுந்தரம், எல்ஐசி வளர்ச்சி அதி காரிகள் சங்க தலைவர் பாலாஜி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலை வர் ஆர்.கோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உதகை
உதகையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத் தின் கிளை தலைவர் எச்.கோபால், செயலாளர் எம்.தினேஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள எல்ஐசியின் மண்டல அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிராக முழக்கமிட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்மண் டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத் தலைவர் தர்மலிங்கம், காப்பீட்டு கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் ஏ.கலிய பெருமாள், துணை தலைவர்கள் எம். கே. கலைச் செல்வி, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.