வேலூர். ஜூன் 14 - இணைப்பு என்ற பெயரில் மூடப்பட்ட 96 அரசு இ-சேவை மையங்களை உடனே திறக்க வேண்டும் என தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வினோத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மனோஜ்குமார், சசிரேகா, மாவட்டச் செயலாளர் ஜி.வினோத்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எந்த முன் அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட 3 ஊழியர்களை (வாணியம் பாடி, ஆம்பூர், பேர்ணாம்பட்டு மைய பணி யாளர்கள்) கோட்டீஸ்வரி, பரிமளா, அனிதா ஆகியோரை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இணைப்பு என்ற பெயரில் மூடப்பட்ட 96 அரசு இ-சேவை மையங்களை உடனே திறக்க வேண்டும், ஆதார் ஊழி யர்களுக்கான சம்பளத்தை முறையாக காலதாமதமின்றி வழங்க வேண்டும், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அரசு இ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு சேவை தடையின்றி வழங்க தேவையான உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.