சென்னை:
தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக உள்ள பங்கஜ் குமார் பன்சால், துணை மின் நிலையங்களையும், இதர பகிர்மான பணிகளையும் (இயக்கம், பராமரிப்பு) தனியாருக்கு அவுட்சோர்சிங் முறையில் தனியாருக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தொழிற்சங்கங்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். மின்வாரியத் தலைவரையும், இணை மேலாண்மை இயக்குநரையும் இடமாற்றம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள பிரிவு அலுவலங்கள், செயற்பொறியாளர் அலுவலகங்கள், வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலங்கள் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர்கள் தி.ஜேய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் (தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு), தனசேகரன் (தொழிலாளர் சம்மேளனம்), சந்திரசேகர் (கணக்கு மற்றும் நிர்வாக அலுவலர் சங்கம்), மணிமாறன் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), சேவியர் (தொழிலாளர் சம்மேளனம்) உள்ளிட்ட 16 சங்கங்களின் தலைவர்கள் பேசினர்.