tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 10-   திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூன் 10) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொய்த்து போன தாலும்,  நிலத்தடி நீர் அதள பாதாள த்தில் சென்றதாலும் நெல் பயிர், கரும்பு, தோட்டப் பயிர்கள் என எல்லா வகையான பயிர்களும் வறட்சியால் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் ஏரி, குளங்களை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய  நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொன்னேரி அம்பேத்கர் சிலை  அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாவட்ட துணைச் செயலா ளர் நா.ஜீவா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் பி.ரவி, மாவட்ட துணைத் தலை வர்கள் பி.கதிர்வேல், எம்.ரவிக்குமார், வைரமணி, சீனிவாசன், கருணாமூர்த்தி, மாதர் சங்க பொருளாளர் ஏ.பத்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை, பொரு ளாளர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.