tamilnadu

அரியலூர் மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

 அரியலூர், பிப்.23-  அரியலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கையில், அரிய லூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் இணைக்காதது மிகப் பெரும் தவறு. அரியலூர் பகுதிகளில் 70 சத விகித மக்கள் தங்கள் வாழ்வாதா ரத்திற்காக விவசாயம் மற்றும் அதனு டன் தொடர்புடைய பணிகளில் ஈடு பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மூலம் தா. பழூர், திருமானூர் மற்றும் ஜெயங்கொண் டம் பகுதிகளில் 10,389 ஹெக்டேர் (25671 ஏக்கர்) அளவுக்கு விவசாயம் நடை பெறுகிறது என்று அரியலூர் மாவட்ட அரசு இணையதளம் கூறுகிறது. கொள்ளி டம் கரையோரம் அமைந்துள்ள திருமா னூர், தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கொள்ளிடம் நீராதா ரத்தைக் கொண்டே விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. புள்ளம்பாடி வாய்க்கா லின் மூலம் திருமானூர் பகுதியிலுள்ள 6000 ஹெக்டேர் நிலமும், நந்தியாறு மூல மாக 2,000 ஹெக்டேரும், பொன்னாறு மூலமாக 1877 ஹெக்டேரும், வடவாறு மூலமாக 463 ஹெக்டேரும் பாசன வசதி பெறுகின்றன. இந்தப் பகுதிகளில் நெல் பெருமளவில் விளைவிக்கப் படு கிறது. இப்போது இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்காததால் பல பாதிப்புகள் வரும்.  ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டங்கள் அடிப்படையில், அய்ந்து இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து பணி களை துவங்கியுள்ளது. இந்த சட்ட மசோதாவில் அரியலூர் மாவட்டத்தை இணைக்காததால் அவர்கள் இனி முழு வீச்சில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப் படுத்துவார்கள்.  இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு வேகமாக குறையும். ஏற்கனவே மாவட் டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்ற புகார் விவசாயிகளால் எழுப்பப் பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்முறைக்கு வந்தால், அரியலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வை முழு வதுமாக சீரழித்து விடும். மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்காததற்கு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளன என்ற காரணத்தை கூறு கிறார்கள். சிமெண்ட் ஆலைகள் அரி யலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களி லேயே அமைந்துள்ளன. சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் இந்த ஒன்றியங்களி லேயே அமைந்துள்ளன. எனவே இது ஒரு ஏமாற்றுக் காரணமே ஆகும். எனவே உடனடியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள செம்பி யக்குடி துவங்கி அணைக்கரை வரை யிலான திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்” இணைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.