tamilnadu

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவள்ளூர், மார்ச் 5-  திருவள்ளூர் மாவட்டத் தில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமையன்று (மார்ச் 7) ஆம் தேதி நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்  தெரி வித்துள்ளார். விளையாட்டில் பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் நுழை வுப் படிவத்தினை துறை அலுவலரின் ஒப்புதலுடன் மார்ச் 7 அன்று காலை 8  மணிக்குள் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள் ளது. தடகளம், நீளம் தாண்டு தல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேசைப்பந்து, கையுந்து பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த  அணிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு  செல்வதற்கு தகுதி பெறு கிறார்கள். மாநில அளவிலான போட்டிகளுக்குச் செல்லும் அணிகளுக்கு சீருடை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்படும். விளையாட்டுப் போட்டி களில் அரசு ஊழியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என  திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார்  தெரிவித்துள் ளார்.