articles

img

படைப்பாளி குடும்பங்கள்... - ராமச்சந்திர வைத்தியநாத்

படைப்பாளி குடும்பங்கள்... - ராமச்சந்திர வைத்தியநாத்

குடும்பத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் வாசிப்பது என்பது என்னாளிலும் பெரிய அளவில் இருந்ததில்லை. இது சமீப காலங்களில் அரிதாகவே இருந்து வருகிறது. அதே தருணத்தில் குடும்பத்தில் பலரும் பல்துறை அறிஞர்களாகவும், அறிவியலாளர்களாகவும், நுண்கலைகளில் நாட்டமுடையோராகவும், குறிப்பாக படைப்பாளிகளாகவும் இருந்து வருவது என்பது அரிதினும் அரிது. 

ரிதினும் அரிது.  “எம்மா”, “பிரைட் அண்ட் பிரிஜுடிஸ்” போன்ற கீர்த்தி  வாய்ந்த புதினங்களின் படைப்பாளியாக அறியப்பெற்ற ஜேன் ஆஸ்டின் எழுதிக் குவித்தாரெனில், அவரது சகோதரி கஸாண்டிரா அவரது பல கடிதங்களை கிழித்தி ருப்பதாக படித்ததுண்டு. இன்றும் நான் விரும்பி அவ்வப்போது வாசித்து வரக்கூடிய “மை ஃபேமிலி அண்ட் அதர் அனிமல்ஸ்” மற்றும் “பர்ட்ஸ், பீஸ்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ்” போன்ற புத்தகங்களை எழுதிய ஜெரால்ட் டூரல் இயற்கை ஆர்வலருங்கூட. இவரது குடும்பதைச் சார்ந்த பலரும் படைப்பாளிகள்தான். புகழ் பெற்ற நவீனமான “வுதரிங் ஹைட்ஸை” எழுதிய எமிலி ப்ரான்டியின் சகோதரிகள் சகோதரர்கள் மட்டு மின்றி உறவினர்களும் படைப்பாளிகள்தான். இன்னும்  சொல்லப் போனால் க்ரிம் சகோதரர்கள் வில்ஹெம்மும்  ஜகோப்பும் சேர்ந்துதான் “ஸ்நோஒயிட்டும் ஏழு சித்திரக் குள்ளர்களும்” மற்றும் “ஹன்சல் அண்ட் கீரிடல்” போன்ற  உலகெங்கிலும் இன்றும் போற்றிவரக்கூடிய குழந்தை களுக்கான இலக்கியத்தைப் படைத்தவர்கள் ஆவர்.  சார்லஸ் டிக்கன்ஸ் பற்றி அறியாதோர் எவரும்  இருக்க முடியாது. அவரது கொள்ளுப் பேத்திகளும் படைப்பாளிகள்தான். மோனிகா எழுதிய சுயசரிதை போன்றதொரு புத்தகத்தை எழுபதுகளில் படித்தி ருக்கிறேன். இங்கிலாந்தாக இருந்தாலும் அல்லது இந்தி யாவாக இருந்தாலும் வீட்டில் பெண் குழந்தைகளை நடத்தக்கூடிய விதம் ஒன்றாகத்தான் இருக்கிறது என்ற கருத்தினை அப்படைப்பு உருவாக்கியிருக்கிறது. பிரிட்டனின் வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் டாயன் பியின்  “எ ஸ்டடி ஆஃப் ஹிஸ்டரி” வரலாற்று நூல்களில் முக்கி யத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 12 பாகங்களைக் கொண்ட இப்பதிப்பு சுருக்கமாகவும் வெளிவந்திருக்கி றது. இதே பெயரினைக் கொண்ட இவர் பெரியப்பா மட்டுமின்றி சகோதர சகோதரிகளும் வரலாற்று அறி ஞர்கள் மட்டுமல்ல பல்வேறு நூல்களையும் எழுதி யுள்ளனர்.  அறுபதுகளின் மத்தியில் தினமணி நாளிதழில் அன்றைய அதன் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்கள்  குன்னர் மீர்தல் எழுதிய தேசங்களின் வறுமை குறித்த ஆய்வு நூலான “ஏஷியன் டிராமா” குறித்து கட்டுரைத் தொடரினை எழுதினார். அதன் பின்னரே அவரது மனைவியும் பொருளாதார ஆய்வாளர் என்பதையும். இருவரும் நோபெல் பரிசு பெற்றவர்கள் என்பதையும் அறிய நேர்ந்தது. தவிர இவர்களது மகன் ஜேன் மீர்தல்.  அவர் மனைவி கன் காஸெல் இருவருமே படைப்பாளி கள் என்பதும் தெரிந்தது. அன்னாளில் அவர்கள் இரு வரும் இணைந்து உருவாக்கிய “ரிப்போர்ட் ஃப்ரம் எ சைனீஸ் வில்லேஜ்” எனும் புத்தகம் மாற்று சமூகம் பற்றிய அக்கறை கொண்ட இளைஞர்கள் மத்தியில் பெரிதும் சிலாகிக்கப்பட்ட புத்தகமாகும்.  இந்தியாவில் தாகூர் குடும்பத்தவரை சட்டென்று சொல்லிவிடலாம். ஜொரெசெங்கோ ஹவுஸில் பிறந்து  வளர்ந்த எவரும் கவிஞராக. இசைவாணராக. படைப்பா ளியாக இல்லாது இருப்பதுதான் ஆச்சரியத்தை தரும்.  தமிழ்நாட்டிலும் குடும்ப உறவுகளுடனான படைப்பாளிகளுக்கு பஞ்சமேயில்லை. விடுதலைப் போரில் பட்டி தொட்டியெங்கிலும் உத்வேகத்தை ஏற்படுத்திய “கொக்கு பறக்குதடி பாப்பா”, “பஞ்சாப் படுகொலை” போன்ற எண்ணற்ற பாடல்களை இயற்றிய  மதுரகவி பாஸ்கரதாஸின் மகன் சண்முகம் மட்டுமின்றி பேரப்பிள்ளைகள் கோணங்கி, முருகபூபதி, தமிழ்ச்செல்வன் போன்றோரும் படைப்பாளிகள்தான். அது மட்டுமல்ல தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முகமாக அறியப்  படுவபவர் மட்டுமின்றி, அரசியல் செயற்பாட்டாள ருங்கூட.  ஏட்டிக்குப் போட்டியாக மட்டுமின்றி, தமிழ்ச் சமூ கத்தின் மேன்மைக்கும் பக்தி இயக்கத்திற்கும் மதசமரச  முயற்சிகளுக்கும் வித்திட்ட இளமை குன்றாத தமிழ் மரபை விதைத்தவர் கல்கி. அவர் எழுதி முடிவுறாத அமரதாரா புதினத்தை அவர் மகள் ஆனந்திதான் தொடர்ந்து எழுதினார். மகன் ராஜேந்திரன் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல பல்வேறு புதினங்களின் படைப்பாளியுங்கூட. கொள்ளுப் பேத்திகள் சீதா, கௌரி மற்றும் கௌரியின் கணவர் ராம்நாராயணன் ஆகியோரும் படைப்பாளிகள்தான்.  முன்னோடி இலக்கியப்படைப்பாளி குபரா அவர்களுக்கு உற்ற துணையாக நின்றதோடன்றி தனித்துவமிக்க படைப்புகளையும் உருவாக்கியவர் அவரது சகோதரி கு.ப.சேது அம்மாள். இவரது  பல்வேறு படைப்புகளை கலைமகள் பதிப்பித்திருக்கி றது. சுதந்திரப் போராட்ட வீராங்கனை வசுமதி ராமசாமி யின் “கேப்டன் கல்யாணம்” அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் ஒன்றாகும். இவரது மகன் சேஷசாயி தொழிற்துறை விற்பன்னர் மட்டுமின்றி படைப்பாளியுங்கூட. அன்னாளில் மாலா வில் நிறையவே எழுதியிருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு பொறுப்பாசிரியராகவும் இருந்த ஞாபகம். ஹா.கி.வாலம் எனும் கவிதாயினி சுதந்திரப் போர் குறித்த  கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட அதிக அளவிலான  இறையியல் சார்ந்த படைப்புகளை கொணர்ந்திருக்கி றார். இவரது துணைவர் கிருஷ்ணசாமி ராணுவ வீரர்.  அதே நேரத்தில் கவிதைகளையும் எழுதி வந்தது ஆச்ச ரியமே. இவரது “கடல்துமி” எனும் தொகுப்பொன்றுக்கு  மனைவியே முன்னுரை எழுதி வெளியிடப்பட்டிருந்தது. து.ராமமூர்த்தி-சரோஜா ராமமூர்த்தி இருவருமே அபூர்வமான படைப்பாளிகள்தான். து.ரா கணை யாழியில் தொடராக எழுதிய குடிசை நவீனத்தைத்தான்  பின்னாளில் அவரது மகன் ஜெயபாரதி திரைப்பட மாக எடுத்தார். அவரும் சிறுகதைகளையும் புதினங்க ளையும் நிறையவே எழுதியவர். இன்னொரு மகன்  ரவீந்திரன் அதிகமாக பேசப்படாவிட்டாலும் படைப்பாளி  என்பதைக் கடந்து ஒரு கட்டத்தில் பரவலாக பேசப்பட்ட சிற்றிதழ் “பிரக்ஞை”யின் ஆசியராக செயல்பட்டவர். இவர்கள் வீட்டு மருமகன்தான் சுப்பிரமணிய ராஜு. எழு பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட சிறுகதை எழுத்தா ளர். சோதனைப் படைப்புகள் பலவற்றை தந்திருக்கக் கூடிய அவர் விபத்தொன்றில் அகால மரணமுற்றது பெருஞ்சோகமாகும்.  தமிழ்ச் சமூகம் பெரிதும் அறிந்து வைத்திருக்கக் கூடிய திகசி-வண்ணதாசன் பன்முகப் படைப்பாளிகள். தந்தை மிகச் சிறந்த விமர்சகர் என்பதைக் கடந்து  மாற்று அரசியல் பாதையில் உறுதியுடன் பயணித்தவர்.  மணிமொழி என்னை மறந்து விடு என்று தமிழ்வாணன் சொன்னாலும், அவரை லேசில் மறந்துவிடவே முடியாது.  அவரது மகன் லேனா பற்றி அறிமுகமே தேவை யில்லை. இருவருமே பரபரப்பான படைப்பாளிகள்தான்.  தமிழுக்கு ஞானபீட விருதை பெற்றுத்தந்த அகிலன்,  மகன் கண்ணன் இருவருமே சிறப்பான படைப்பாளி கள்தான். கண்ணனின் மாமனார் கண முத்தையா இந்திய  தேசிய ராணுவ சிப்பாய் மட்டுமல்ல, ராகுல்ஜியின் புகழ்பெற்ற வால்காவிலிருந்து கங்கை வரை எனும்  நூலை தமிழில் வழங்கியவர். கண்ணனின் புதல்வியர் இருவருமே படைப்பாளிகள் மட்டுமல்ல பதிப்புச் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குடும்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாளிக் குடும்பம் என்றால் சுகி சுப்பிரமணியம் அவர்களின் குடும்பம்.  ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய வானொலி நாடகக் கலைஞரான சுகி சுப்பிரமணியன் பன்முகங்  கொண்ட படைப்பாளி. சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள், சுய முன்னேற்றக் கட்டுரைகள் போன்ற வற்றை எழுதியிருக்கிறார். அரு ராமநாதனின் காதல் பத்திரிகையில் இவர் நிறையவே எழுதி வந்தை படித்தி ருக்கிறேன். அவரது மனைவி கோமதி சுப்பிரமணியமும் சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியவர். இவரது கதையொன்று “மாலதி” எனும் திரைப்படமாக கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்திருக்கி றது. இவ்விணையரின் மகன்கள் எம்.எஸ்.பெருமாள்,  எஸ்.நம்பிராஜன், சுகி சிவம் ஆகிய மூவர் மட்டுமின்றி  மகள்கள் ராஜலட்சுமி, சிவகாமி, காந்திமதி ஆகி யோரும் படைப்பாளிகள்தான். எம்.எஸ்.பெருமாள் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றி நாடகங்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “அவள் ஒரு தொடர்கதை” இவரது கதைதான். நம்பிராஜன் குடும்ப வழமைக்கேற்ப நாடகத்துறையில் செயல்பட்டு வருகிறார். சுகி சிவம் இன்றைய தமிழ்ச்சமூகம் போற்றக்கூடிய படைப்பாளி. சுய முன்னேற்றம் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதி வருவதோடு ஒற்றைப் பண்பாட்டியலின் எதிர் முகமாக அறியப்படுகிறவரும்கூட.  சுகி கோமதி இணையரின் மூத்த மகள் ராஜலட்சுமி மொழி பெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர். வானொலி  நாடகங்களையும் எழுதி வருகிறார். இவரது சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசினைப் பெற்றிருக்கிறது. சிவகாமியும் படைப்பாளிதான். காந்திமதி ஒலிபரப்புப் பணியில் இருந்து வருவதோடு நாடகங்களையும், சிறு கதையும் எழுதியிருக்கிறார். இந்த எண்மர் மட்டுமின்றி ஒன்பதாவதாக மற்றொரு படைப்பாளியும் இவர்கள் குடும்பத்தில் நுழைந்திருக்கிறார். அவர்தான் எம்.எஸ்.பெருமாளின் மனைவி பாலா. சிறுகதை எழுத்தாளர்.  இந்த ஒன்பதுபேரின் மாறுபட்ட படைப்புகள் பதி னொன்றைக் கொண்ட தொகுப்பு நூல் ஒரே குடும்பம்  என்ற பெயரில் அகிலன் அவர்களின் முன்னுரையுடன் 1987 இல் ஸ்ரீபாரதி கிரியேன்ஸ் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. சுகியின் வானொலி நாடகம் எனும்  ஒரு அற்புதமான கட்டுரையும் இதில் உள்ளது. இதில்  உள்ள படைப்புகள் யாவுமே இலக்கியத் தரம் வாய்ந்தவை. அதுவே சுகி சுப்பிரமணியத்தின் குடும்பச்  சொத்தாக இருந்திருக்கிறது. இன்றும் இருந்து வரு கிறது.