tamilnadu

img

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை:
தமிழக அரசுப்பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர் பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.