சென்னை:
மாற்றுத்திறன் அரசு ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்தின் போது பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து பிறப்பிக் கப்பட்ட உத்தரவை தமிழக அரசு –அனைத்து துறைகளிலும் அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. இந்நிலையில் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சிரமங் கள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறன் ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்து இதுவரை 5 அரசாணைகள் அரசு தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.ஆனால் கூட்டுறவு, கைத்தறி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் அரசாணையின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. உதாரணங்களாக கமுதி அருகே கைத்தறித்துறையின் கீழ் செயல் படும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் உடல் ஊனமுற்ற 6 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் விலக்கு அளிக்க நிர்வாக மேலாளர் மறுத்துள்ளது மட்டுமின்றி, ஊதியமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் அறிவுறுத்தியும், அலுவலக பணியாளர்களுக்கு மட்டுமே அரசாணை பொருந்தும் என அரசாணை உள் நோக்கத்தை மாற்றி உத்தரவிடுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், அரசுப் போக்குவரத்துக் கழகம், ராணித் தோட்டம் பணிமனை-3ல் பணிபுரியும் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறன் ஊழியர் மற்றும் சிறுநீரக பாதிப்பினாலும் அவதிப்பட்டு வரும் ஏ. நீலகண்டபிள்ளை அவர்கள் வைத்திருந்த விடுப்புகளை காலி செய்தும், வராத மற்ற நாட்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்தும் அரசாணைக்கு விரோதமாக செயல் பட்டுள்ளது நிர்வாகம்.தமிழக அரசின் நல்ல நோக்கத்துடன் உத்தரவிடப்பட்டுள்ள அரசாணைகளுக்கு விரோதமாக மாற்றுத் திறனாளி களை மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட்டுள்ள மேற்கண்ட நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், சம் பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வலியுறுத்துகிறோம்.
அனைத்து அரசுத்துறை நிறுவனங்களும் அரசாணை நோக்கம் நிறைவேறும் வகையில் மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு சாதகமாக செயல்பட தமிழக முதலமைச்சர் உத்தரவிடவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.