கொலையாளித் திமிங்கிலங்கள் மாறுகின்றன
பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினமான நீலத் திமிங்கிலங்களை கடல் நீர்ப்பரப்பிற்கு மேல் இழுத்துவந்து மூச்சு முட்டச்செய்து அவற்றின் வாய்க்குள் தலையை நுழைத்து நாக்கை பிடுங்கியெடுத்து இரத்தத்தோடு ருசித்து சாப்பிடுவது, சுறாக்களின் மார்பைத் திறந்து எடுத்து மற்ற கொலையாளித் திமிங்கிலங்களுக்கு விருந்து கொடுப்பது என்று வோர்க்கா (orca) எனப்படும் கொலையாளித் திமிங்கிலங்களின் நடத்தை மாறுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கடல் கொலைகள் மனிதர்களில் கொடூரமான கொலைகளைச் செய்யும் தொடர் கொலைகாரர்களை மிஞ்சும் வகையில் அமைந்துள்ள செயல்கள் என்று விஞ்ஞா னிகள் கருதுகின்றனர். மீன்பிடி படகுகளை ஆழத்தில் இழுத்துச்செல்வது, திமிங்கலங்களுக்கும் டால்பின்களுக் கும் இடைப்பட்ட வகைப்பாட்டில் உட்படுத்தப்பட்டுள்ள போர்பஸ் (Porpoise) என்று அழைக்கப்படும் கடல் பன்றி கள், சால்மன் (salmon) மீன்களை பந்து தட்டுவது போல தூக்கிப்போட்டு விளையாடுவது போன்ற இவற்றின் பொழுதுபோக்குகளும் பீதியை ஏற்படுத்துபவையாக உள்ளன. 2019 மார்ச்சில் இந்த வகை திமிங்கிலங்களின் முதல் மோதல் போக்கு கண்டறியப்பட்டது. தென்மேற்கு ஆஸ்தி ரேலியாவில் ஒரு டஜன் கொலையாளித் திமிங்கிலங்கள் சேர்ந்து உயிருடன் இருந்த திமிங்கிலத்தின் இரண்டு பக்கங்க ளையும் கடித்துத் தின்ன ஆரம்பித்தன. ஒருசில மணி நேரத்திற்குள் இரையான நீலத்திமிங்கிலம் உயிரிழந்தது. இதற்குப் பிறகு கடந்த சில காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், பைலட் திமிங்கிலங்களைக் கடத்திக் கொண்டு போய் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சுறாக்களைத் தாக்கி அவை உயிருடன் இருக்கும் போதே அவற்றின் உடலைப் பிளந்து இதயப்பகுதியை கடித்தெடுத்து தின்பது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஸ்பெயின், போர்ச்சுக்கல் கடற்பகுதிகளில் மனிதர்கள் பயணிக்கும் படகுகளை கூட்டமாக தாக்கி மூழ்கடித்து கொடும் செயல்களில் ஈடுபடுகின்றன. இந்த சம்பவங்கள் இவற்றின் புத்திக்கூர்மை அதிகரிப்பதன் அடையாளமே என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உடலுக்குள் நிகழும் மாற்றங்களும் இதற்குக் காரண மாக இருக்கலாம் என்று வேறு சில ஆய்வாளர்கள் கூறு கின்றனர். மூளை வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனத்தில் மனிதனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்த உயிரி னங்கள் உள்ளன. என்றாலும் திமிங்கலங்களின் மூளைப்பகு தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வோர்க்காக் களை ஆராயும் நிபுணர் மக்கின்னஸ் (McInnes) கூறுகிறார். விலங்குகளின் இயல்பு மாற அவை வாழும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும், உடலில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இத்தகைய மாற்றங் கள் ஏற்பட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும் பரி ணாம மாற்றங்கள் அவசியம். இது போன்ற மாற்றங்கள் முன்பே நிகழ்ந்திருக்கலாம். மனிதர்கள் போல சூழல் மாறுவதற்கேற்ப மற்ற உயிரினங்களும் வாழ்க்கைமுறை மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வா ளர்கள் நம்புகின்றனர். கடலில் மனிதனின் போக்குவரத்து அதிகரித்ததும் கால நிலை மாற்றமும் புதிய சூழலிற்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள புதிய சுபாவங்களைக் கற்கின்றன. பழக்கப்படுத்திக்கொள்கின்றன. வெளிப்படுத்துகின்றன. அண்டார்டிகா வெடல் கடலில் (Weddell Sea) முன்பு சாதாரணமாக மீன்களைப் பிடித்து தின்றுகொண்டிருந்த இவை இப்போது அப்பகுதியில் பனிப்பாறைகளை சார்ந்து வாழும் நான்கு இன சீல்களில் ஒன்றான சிறுத்தை சீல்களை (Leopard seals) பனி உருகும்போது வேட்டையாடி உண வாக உட்கொள்ளும் திறனைப் புதிதாக பெற்றுள்ளன. இவற்றில் வளர்ந்த திமிங்கிலங்கள் இது போன்ற தந்தி ரங்களை இளம் தலைமுறைக்கு சொல்லித் தருகின்றன என்று ஆரிகான் ஸ்டேட் பல்கலைக்கழக கடல்சார் சூழலிய லாளர் ராபர்ட் எல் பிட்மேன் (Robert L. Pitman) கூறுகிறார். சமூக விலங்குகளான இவை கூட்டமாகவே வாழும் இயல்பு டையவை. சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) கணக்குகளின்படி இவை ஆபத்து இல்லாத காட்டு யிர்கள் (Least Concerned LC) பிரிவில் உட்படுத்தப் பட்டுள்ளன. ஆண் திமிங்கிலங்களின் நீளம் 10 மீட்டர். உடல் எடை 9,800 கிலோகிராம். பெண் திமிங்கிலங்களின் உடல் நீளம் 8.5 மீட்டர். இவை ஆணை விட உடல் எடை குறைவா னவை. பன்னாட்டு திமிங்கில பாதுகாப்பு கவுன்சில் (IWC) மற்றும் விலங்கு நல ஆர்வலர்களின் தொடரும் கடும் எதிர்ப்பு களுக்கு இடையிலும் கிரீன்லாந்து போன்ற சில நாடுகளில் இந்த உயிரினங்கள் அரசின் அனுமதியுடன் இப்போதும் வேட்டையாடப்படுகின்றன. தன்னை விட பெரிய திமிங்கிலங்களை இரையாகப் பிடித்து உண்பதால் இவை கொலையாளித் திமிங்கிலங்கள் (Killer whales) என்று அழைக்கப்படுகின்றன. மாறும் மனிதனின் குறுக்கீடுகளால் வாழப்போராடும் உயிரினங்கள் வாழப் போராடுகின்றன. இதற்கு இந்த ஆய்வுமுடிவுகள் சிறந்த எடுத்துக்காட்டு என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.
இரவு விலங்குகளாக மாறும் மலையாடுகள்
புவி வெப்ப உயர்வால் மலையாடுகள் போன்ற பாலூட்டி விலங்குகளின் வாழ்க்கைமுறை மாறுகிறது. இவை இரவு விலங்குகளாக (nocturnal animals) மாறுகின்றன. இதனால் எதிரிகளால் இந்த உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து அதிகமாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தாலி மேற்கு மத்தியதரைக் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சார்டினியாவில் (Sardinia) உள்ள சசாரி (Sassari) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆல்ப்பைன் ஐபெக்ஸ் (Alpine ibex) என்ற இனத்தைச் சேர்ந்த மலையாடுகளில் இந்த ஆய்வை நடத்தினர். வெப்பம் அதிகமான நாட்களில் ஆய்வாளர்கள் இவை இடம்பெயர் வதை காட்டும் இருப்பிடமறியும் தொழில்நுட்பத்தில் செயல்படும் உணரி களைப் பயன்படுத்தி மலையாடுகளின் நடமாட்டத்தை ஆராய்ந்தனர். 2006- 2019 மே முதல் அக்டோபர் வரை உள்ள காலத்தில் இந்த ஆய்வுகள் நடந்தன. வழக்கமாக பகல் நேர விலங்குகளாக (diurnal animals) இருந்த இவை வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்க ளில் இரவில் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளன என்று ஆய்வாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். இரவில் எதிர்கொள்ளும் இரண்டு ஆபத்துகள் இரண்டு ஐரோப்பிய தேசிய பூங்காக்களில் நடந்த இந்த ஆய்வுகள் இவற்றின் எதிரிகள் அதிகம் நடமாடும் நாட்களிலேயே இவற்றின் இரவு நேர உணவுத் தேடலும் நடைபெறுகிறது என்று கூறுகின்றன. இதனால் இவை ஒரே நேரத்தில் அதிக வெப்பத்தையும் சமாளித்து எதிரிகளிடம் இருந்தும் தப்பிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. “ஓநாய்கள் பொதுவாகக் குறைவாக காணப்படும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இவற்றின் இரவு நேர உண வுத்தேடல் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. வெப்ப உயர்வில் இருந்து தப்ப ஆனால் நடந்தது இதற்கு எதிர்மாறா னதாக இருந்தது. உயரமான பகுதி களில் ஓநாய்கள் அதிகமாக காணப் பட்டன” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் டாக்டர் பிரான்ச் செஸ்க பிரிவியோ (Dr Francesca Brivio) கூறுகிறார். இந்த ஆய்வு முடிவு கள் புவி வெப்ப உயர்வால் பாலூட்டி கள் வெப்ப அலைத் தாக்குதல்களில் இருந்து தப்ப தங்கள் இரவு நேர செயல்பாடுகளை அதிகரித்துவரு கின்றன என்று இதை குறித்து நடந்த மற்ற ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது தெரியவந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆபத்தான இரவு நேரம் இரவில் வெப்பம் குறைவாக இருக்கும்போது மற்ற விலங்குகள் தங்கள் செயல்பாட்டை அந்த நேரத் திற்கு மாற்றிக்கொள்கின்றன. பகலில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் அவற்றால் சுறுசுறுப் பாக செயல்பட அல்லது உணவு உண்ண முடிவதில்லை. உணவைத் தேடுதல் போன்ற எல்லா செயல்களையும் அவை இரவு நேரத்தில் வைத்துக்கொள்கின் றன. மலையாடுகள் போன்ற விலங்கு களில் இந்த மாற்றம் இவற்றின் எண் ணிக்கை குறைய காரணமாகலாம். பாறைச்சரிவுகளில் மலையாடுகள் பாரம்பரியமாக பகல் நேர செயல் களைச் செய்வதற்கே பழக்கப்பட்ட இந்த உயிரினங்கள் இரவில் உணவு தேடுவதும், பாறைச்சரிவுகளை வாழிட மாகக் கொண்ட இவை இரவில் நட மாடுவதும் மிகக் கடினமானது. இது இவற்றின் உணவு தேடுதலிற்கான செயல்களைத் திட்டமிடும் ஆற்றலை யும், உணவு தேடும் திறனையும் குறைக்கிறது. இது குறித்த தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்றாலும் இரவில் இவற்றிற்கு உணவு கிடைப் பது குறைவாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் இரவு வாழ்க்கை மலையாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இவற்றின் உடற்தகுதி யும் (fitness) மற்றும் எண்ணிக்கையும் குறைய வழிவகுக்கும் என்று ஆய்வா ளர்கள் அஞ்சுகின்றனர். மேலும் இந்த மாற்றம் இரவில் ஏற்கனவே சுறுசுறுப்பு டன் செயல்படும் எதிரிகளுடன் இவை மோத வேண்டிய சூழ்நிலையை உரு வாக்குகிறது. இவற்றின் எண்ணிக்கை குறைய இதுவும் ஒரு காரணமாக அமையலாம். மாற வேண்டிய தொழில்நுட்பம் புவி வெப்ப உயர்வால் விலங்கு களில் அதிகரித்துவரும் இரவு நேர செயல்பாடுகள் வருங்காலத்தில் இவற்றை ஆராயும் முறைகளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக விலங்குகளின் கணக்கெ டுப்பு பகல் நேரத்தில் வெளிச்சம் அதிக மாக இருக்கும் இடங்களில் நடத்தப்படு கின்றன. ஆனால் எதிர்காலத்தில் பகலை விட விலங்குகள் இரவு நேரத்தி லேயே அதிக சுறுசுறுப்புடன் செயல் படும். அதனால் வருங்காலத்தில் இவற்றை கணக்கெடுப்பதிலும் ஆராய் வதிலும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பின்பற்றவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரவை பகலாக்கி தன் வாழ்க்கை முறையை மாற்றிய மனிதனால் ஏற்படும் புவி வெப்பத்தால் விலங்குகள் உண விற்காக இரவில் அலையும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ள்ளது.