tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

திருவள்ளூர்,டிச.31 திருவள்ளூர் மாவட்டத் திலும் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்த மல்லி, திருவாலங்காடு ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாகவும், வில்லி வாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஆகிய 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2 ஆம் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து ள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்க ளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். புழல் - பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவரம்- பிண்டிகுர் கண்ணையா செட்டி அரசு பள்ளி, கும்மிடிப்பூண்டி- கே.எல்.கே. ஆண்கள் பள்ளி, திருவாலங்காடு- அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தணி-சுப்பிரமணிய சாமி கலை மற்றும் அறிவி யல் கல்லூரி,  பள்ளிப்பட்டு- அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை - அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்-ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி, பூண்டி- டி.இ.எல்.சி. கபிஸ் உயர்நிலைப்பள்ளி,  கடம்பத்தூர் - செயின்ட் ஜோசப் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி,  எல்லாபுரம்- அரசு மேல் நிலைப்பள்ளி கன்னிகை பேர், பூந்தமல்லி-அறிஞர் அண்ணா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, வில்லி வாக்கம் - ராமசாமி முதலி யார் மேல் நிலைப்பள்ளி மீஞ்சூர் - எல்.என்.ஜி. அரசு கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன.