தஞ்சாவூர், பிப்.15 - தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 7 இடங்களில் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. பிப்.19 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி யிலும், கும்பகோணம் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியி லும், அதிராம்பட்டினம் நகராட்சியில் பதிவான வாக்குகள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை, அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. பேராவூரணி, பெருமகளூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத் திருப்பூந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதி வான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநா கேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதி வான வாக்குகள் கும்பகோணம் லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொண்டு வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா, காவல்துறை பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும், கும்ப கோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கும், பட்டுக் கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், அதிராம்பட்டி னம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கும் என மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20 பேரூராட்சிகளில் 300 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.