india

வாக்கு எண்ணிக்கை மேஜையை குறைக்கக் கூடாது... தலைமை தேர்தல் அதிகாரிக்கு சிபிஎம் நேரில் கடிதம் வழங்கி வலியுறுத்தல்.....

மும்பை:
கொரோனா வைரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் மே 1 ஆம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள லாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுவரை தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி, மாநில அரசுகளுக்கு வழங்கிவந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தை யில், மாநிலங்கள், தனியார் மருத்துவமனை கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய லாம் என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 50 சதவீதம் தடுப்பூசி களை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை அளவுக்கு கட்டுப்பாடு ஏதும் நிர்ணயிக்கவில்லை.வெளிச்சந்தையில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படாத நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிசெலுத்திக்கொள்ள ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தை யில் மருந்து விற்பனைக்கு வந்தால், தனிநபர்களுக்கு ரூ.600 (2டோஸ்) ஆகவும், மாநிலஅரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “அடுத்த இரு மாதங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாதசூழலை எட்டுவோம். வரும் மே 1-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக் கும் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் தடுப்பூசி விலை மிகவும் குறைவு.மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது கோவிஷீல்ட் விலை குறைவு’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் விலை வெளிச்சந்தையில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.