திருவள்ளூர், ஜூன் 7- செங்கல் சூளையில் ஏற்பட்ட விபத்தில் பலியான வடமாநில தொழி லாளர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. சோழவரம் ஒன்றியம் வழுதிகை மேடு கிராமத்தில் வெங்கடேசன் - சுதா ஆகியோருக்கு சொந்தமான கார்த்தி கேயன் பிரிக்ஸ் என்ற செங்கல் சூளை உள்ளது. இங்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த சூளையில் ஜூன் 3 அன்று லாரியில செங்கல் ஏற்றிக்கொண்டு இருந்தபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பிரமிளா சாண்டி (18), மதன பாட்டி சாண்டி (22) ஆகிய இரு இளம்பெண்கள் பரி தாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால் தலைமையில், செயற்குழு உறுப்பி னர் கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.நடேசன், அ.து. கோதண்டன், ஒன்றியச் செயலாளர் ஜி.வி எல்லையன், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.வி முனுசாமி ஆகி யோர் கொண்ட குழு வெள்ளியன்று (ஜூன் 5) செங்கல் சூளைக்கு சென்று தொழிலாளர்கள், உரிமையாளர்களி டம் விசாரித்தனர். இதுகுறித்து பேசிய எஸ்.கோபால், செங்கல் சூளையில் ஒரு குடும்பமும் தினசரி 12 மணி நேரம், வாரம் முழுவதும் பணியாற்றினால் அதிகபட்ச கூலியாக 3000 ரூபாய் தருகின்றனர். உழைப்புக்கேற்ற கூலி தருவதில்லை. சூளையில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் இடம், பணி செய்யும் இடம் பாதுகாப்பற்ற தாக உள்ளது. தங்குமிடம் 100 சதுர அடி கொண்ட கொட்டகையாக உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
2 தொழிலாளர்கள் இறந்த பிறகுதான், ஜூன் 5ந் தேதி அவசர அவசரமாக தொழிலாளர்களை ஒடிசாவுக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர் என்றார். பணியில் இருக்கும் போது ஏற்பட்ட மரணம் குறித்தும் முறை யான விசாரனை மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக பிரேத பரி சோதனை செய்து, அடக்கம் செய் துள்ளனர். காவல்துறையும் வழக்கை கவனக் குறைவு என்று பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. செங்கல் சூளைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிரவாகம் உரிய நடவ டிக்கை எடுக்காமல் உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், தொழிலாளர் ஆய்வாளர் செங்கல் சூளைகளில் முறையாக ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார். கார்த்திகேயன் செங்கல் சூளை யில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும். இந்த வழக்கை விபத்து மரணம் என பதிவு செய்து உரிமையாளர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலா ளர்களுக்கு அடிப்படை வசதிகளை யும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை யும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் செய்ய வேண்டும் என்றும் கோபால் வலியுறுத்தினார்.