districts

img

பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குக - சிபிஎம் வலியுறுத்தல்

திருவள்ளூர், டிச.16- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெற் பயிறுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி திருவள்ளுர் மாவட்டக்குழு வலியுறுத் தியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர் உட்பட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள்  நீரில் மூழ்கி சேதமடைந்தது.  இதேபோல மிளகாய், வாழை மற்றும் பூ விவசாயிகள் என்று அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதி நிதிகளையும் இணைத்துக் கொண்டு, கணக் கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் தொழில்கள் முடங்கியபோது  விளைவித்த பொருட்களை கூட விற்பனை செய்ய முடியவில்லை. அரு கில் உள்ள கடை வீதிகளுக்கு கூட கொண்டு  செல்ல முடியாத அளவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்படி விவசாயிகள் பல்வேறு தாக்குதல்களை சமாளித்து  மீண்டுவரும் சூழலில்,  வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் மேலும் கடுமை யாக பாதிப்பிற்குள்ளாகினர். நட்டத்தில் மூழ்கியுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். திருத்தணி நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அகூர் தரைப்பாலம், கடம்பத்தூர் அருகில் உள்ள போளிவாக் கம் தரைப்பாலம், மெய்யூர் தரைப்பாலம், ஆரணி அருகே காரணி ஆகிய இடங்களில்  உள்ள தரைப்பாலங்கள் சேதமடைந் துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதமடைந் துள்ள  தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை காலங்களில் தரைப் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதும், சில இடங்களில் தரைப்பாலங்கள் சேத மடைவதும் வழக்கமாகியுள்ளது. இதனை களைய தரைப்பாலங்கள் அருகில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியுள்ளார்.