செங்கல்பட்டு, ஜன.7- திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூ ராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான அனைத்து வார்டுகளிலும் பாலாற்று குடிநீர் வழங் கிட வேண்டும், அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு மற்றும் ஆசிரியர் நகர் புற வழிச் சாலையில் கோபுர விளக்கு அமைக்க வேண் டும், வட்டார தலைமை மருத்துவமனையை கூடுதல் படுக்கைவசதியுடன் நவீனப்படுத்தவேண்டும், அரசு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கழிவு நீர் செல்ல கால்வாய் வசதி செய்ய வேண்டும். திருக்கழுக்குன்றத்தில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி அமைக்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சியில் செயல்படுத்த வேண்டும்,
நகரின் முக்கிய சாலைகளை சீரமைக்க வேண்டும், மாமல்லபுரம் செல்லும் பிரதான சாலையில் திருக் கழுக்குன்றம் அமைந்திருப் பதால் ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலை யில் நகரில் முக்கிய சாலை களில் சுகாதாரமான கழிப் பறைகள் அமைக்க வேண் டும், கானகோயில்பேட்டை, ருத்திரன்கோயில், பரமசிவம் நகர் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிக ளுக்கான மயானத்தை வகைப்படுத்தி நிரந்தர மயானமாக ஏற்படுத்தி தர வேண்டும், திருக்கழுக்குன்றத்தி லிருந்து திருப்போரூர் வழியாக அடையார் வரை அரசுபேருந்து இயக்க வேண்டும், நகரப் பகுதியில் கலையரங்கம், பூங்கா அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக் கைகள் நிறைவேற்ற வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. பேரூராட்சி முழுவதும் சிபிஎம் சார்பில் கோரிக்கை களை விளக்கி பொது மக்களிடம் கோரிக்கைகளை துண்டு பிரசுரமாக விநியோ கிக்கப்பட்டது. இதில் கட்சி யின் நிர்வாகிகள் பி.ராம மூர்த்தி, எஸ்.அழகேசன், சி.சந்திரன், து.மூர்த்தி, எ.துலுக்காணம், எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து கட்சியின் கிளை செயலாளர் பி.ராம மூர்த்தியிடம் கேட்டபோது நீண்ட நாட்களாக திருக் கழுக்குன்றம் பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கோரிக் கைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இது குறித்து மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கியுள்ளோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு, ஆதரவும் கிடைத்துள்ளது. விரைவில் இக்கோரிக் கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.