districts

கடைமடைப் பகுதி பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்  சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 25-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் எம்.எஸ் விழா  அரங்கில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஜகுபர்அலி தலைமையில் நடைபெற்றது.  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீல மேகம், ஒன்றியச் செயலாளர் (பொ) வே.ரெங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.வி.குமாரசாமி, சி.ஆர். சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், ‘‘ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளை கண்டித்து ஏப்ரல் முதல் வாரத்தில்  பேராவூரணி, திருச்சிற்றம்பலம், ஆவணம் பகுதியில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, கடைமடைப் பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் மற்றும் பாசன ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை தூர்வார வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.