கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊரடங்குகால நிவாரணமாக மாதம் 7 ஆயி ரத்து 500 ரூபாய் வழங்க கோரி திருவள்ளுவர் மாவட்டத்தில் 18 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எம்.நாகராஜ், மாவட்டச் செயலாளர் ஜெ.ராபர்ட் எபிநேசர், பொருளாளர் வி.ஆர்.லட்சும ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன், பொருளா ளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.