நாகர்கோவில், ஜூன் 11- கட்டுமான தொழிலாளர் களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்களை வழங்கா மல் தேக்கி வைத்து அலைக்கழிப் பதை கண்டித்து சிஐடியு கட்டு மான தொழிலாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கை யாக சுமார் 3 மாத காலமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இதனால் ஏற்பட்ட வேலை யின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியால் குமரி மாவட்டத் தில் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடின. அவர்களுக்கு கோவிட் 19 பேரிடர் கால நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்க (சிஐடியு) சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இல்லா கால நிவரண மாக தலா ஆயிரம் ரூபாய் மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரணத்தை அறிவித்தது.
அதன்படி ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கு வழியாக வும், உணவு பொருட்களை ரேஷன் கடை வழியாகவும் வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை 80 சதவீதம் பேருக்கு கூட நிவாரணம் வழங்காத நிலையே நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள நிவாரணம் கிடைக்காத ஆயிரக்க ணக்கான கட்டுமான தொழிலாளர் களின் பட்டியல் கட்டுமான தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் உயர் அதிகாரிகளுக்கு அளிக் கப்பட்டது. அதன்படி பட்டியலில் உள்ள 716 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய உணவு பொருட்களை உடனடியாக வழங்க குமரி மாவட்ட நிர்வாகம் ஆணையிட்டது. இந்த நிவாரண பொருட்களை தொழிலாளி வாழும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒப்படைத்து வினி யோகிப்பதற்கு பதிலாக நாகர் கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உணவு பொருட்களை நாகர்கோவில் கோணம் பகுதி யில் உள்ள அலுவலகத்தில் தேக்கி வைத்துள்ளார். உண்ணா மலைகடை, அஞ்சுகிராமம், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட தொலைவான பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை தொலை பேசியில் அழைத்து உணவு பொருட்களை 12 ஆம் தேதிக் குள் வாங்கி செல்லுமாறு கூறி யுள்ளார்.
இல்லையென்றால் நல வாரிய அட்டையை ரத்து செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். ஏற்கனவே வருமானத்தை இழந்து வாடும் தொழிலாளர்கள், போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் தொழி லாளர்கள் கோணத்தில் உள்ள அலுவலத்திற்கு வந்து உணவு பொருட்களை வாங்கி செல்ல நிர்பந்தப்படுத்துவதை கண்டித் தும், உணவு பொருட்களை அரசு ஆணைப்படி ரேஷன் கடைகள் வழியாக வழங்க வலியுறுத்தி யும், அரசின் ஆணையை மதிக்கா மல் தன்னிச்சையாக செயல்படும் நாகர்கோவில் தொழிலாளர் அலுவலர் முத்துப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் கன்னியாகுமரி மாவட்ட கட்டு மான தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் வியாழனன்று நாகர் கோவில் கோணம் தொழிலாளர் நல ஆணையாளர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்க மோகன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலிவர் பிறைட், எஸ்.டி.ராஜ குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தின் போது தொழிலாளர் நல ஆணை யாளர் நடத்திய பேச்சுவார்த்தை யில், உணவு பொருட்களை அந் தந்த ரேஷன் கடைகள் வழியாக தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.