திருவள்ளூர், மார்ச் 11- திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் தினசரி 3 அலகு களில் தலா 500 மெகவாட் வீதம் 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கி ருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. இதன் காரணமாக குருவிமேடு கிரா மத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து வருவ தோடு நிலக்கரி சாம்பல் கழிவுகளால் அப்பகு தியில் உள்ள நீர்நிலைகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவைகள் மாசடைந்து வருவ தோடு அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப் படுகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் எங்களுக்கு வேறு இடத்தில் வீட்டு மனைகளை அரசு வழங்க வேண்டும் எனக் கோரி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனுக்கள் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த வழியாக நிலக்கரி சாம்பல் கழிவு களை ஏற்றிவந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை புதனன்று (மார்ச் 11) சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனல்மின் நிலைய அதி காரிகள் நிலக்கரி சாம்பல் கழிவுகள் காற்றில் பறப்பதை கட்டுப்படுத்த அப்பகுதியில் லாரி கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதாகவும் மாற்று குடியமர்த்தல் குறித்து அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்வதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.