உடுமலைப்பேட்டை:
தேங்காய் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்ததால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ள னர். உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக தென்னைகளில் வெள்ளை ஈக்களின்தாக்குதலினால் தேங்காய் மகசூல்குறைந்த நிலையில் தற்போது தேங்காய் விலையும் சரிவடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் நெல், கரும்பு, மக்காச்சோள சாகுபடியை விட விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் தருவதாக இருப்பது தென்னை சாகுபடி மட்டுமே. ஒரு ஏக்கருக்கு தலா 70 தென்னைகளை நட்டு பராமரித்து வந்த வேளையில் 2 மாதத்திற்கு ஒரு வெட்டு என்ற கணக்கில் வருடந்தோறும் 6 முறை தேங்காய் விற்பனை மூலம் குறிப்பிட்ட அளவு வருவாய் பெற முடிந்தது.ஆனாலும் பருவமழை பொய்ப்பது,வெள்ளை ஈக்கள், இலை கருகல் உள்ளிட்ட நோய்கள் தாக்குவது, பூக்கள் உதிருதல், குரும்புகள் உதிருவது என பலதரப்பட்ட நோய்களின் தாக்குதலில் இருந்து தென்னையை பாதுகாக்க வேளாண்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை வாங்கி தெளித்து தென்னைகளை பாதுகாத்து வந்தனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்வது அடிேயாடு பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீர்பற்றாக்குறை, வெள்ளை ஈக்கள் தாக்குதல் போன்றவற்றால் மகசூலும் வெகுவாக பாதிக்கபட்டது. இருப்பினும் ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி,பொங்கல் பண்டிகையை யொட்டி தேங்காய் விலை உச்சத்தை தொட்டது. ஒரு டன் ரூ.46 ஆயிரம் வரை விற்பனையானது.
இதேபோல தேங்காய் பருப்பு (கொப்பரை) போன்றவற்றின் விலையும் கிலோ ரூ.140 வரை விற்பனையானது. விலை உயர்ந்த போதும், போதிய மகசூல் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இருந்த போதும் தோப்பு பராமரிப்பு, உரம் வைத்தல், தேங்காய் பறிக்கும் கூலி போன்ற செலவுகளுக்கு கட்டுப்படியாக கூடிய விலையாக அமைந்தது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேங்காய் விலை சரிவடைந்து தற்போது ஒரு டன் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை யாகிறது. உடுமலையில் இருந்து தாராபுரம், மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது தேங்காய் விலை டன்னுக்கு 2 ஆயிரம்வரை சரிவடைந்துள்ளது. இதே போலகொப்பரையும் ஒரு கிலோ ரூ.130 எனகிலோவிற்கு 2 ரூபாய் சரிவடைந்துள் ளது.தேங்காய் மகசூல் குறைந்து வருவதால் இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் தேங்காய் விலை அதிகரிக்கவாய்ப்புள்ளது என தேங்காய் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், விலைசரிவு தென்னை விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது. ஏனெனில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அடுத்து வரும் மாதங்களில் மகசூல் இதை விட குறைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.