விருதுநகர்,
இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகஅளவில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள் ளன. ஆனால், கடந்த காலங்களில் 50 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு தென்னை மரங்கள் கருகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது வரை உரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லை. மேலும், அரசு அறிவித்த கொப்பரை விலை மிகவும் குறைவு. எனவே, தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் அ.விஜய முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகிலேயே அதிக அளவு தென்னை மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. அதிலும்,தமிழகத்தில்தான் தென்னை மரங்கள் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில்,வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில்உள்ள கன்னியாகுமரி, தஞ்சை, திருப்பூர், திண்டுக்கல் கோவை, மதுரை, தேனி, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனவும், பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு கொள் முதல் விலையாக ரூ.99.20-ம், அரவை கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக ரூ.95.21-ம் வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம்டன் பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரை 45 ஆயிரம் டன் என மொத்தம் 50 ஆயிரம் டன், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது தென்னை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.103 வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், தென்னை விவசாயிகளிடம் பந்து கொப்பரை மற்றும் அரவை கொப்பரையை கிலோ ஒன்றுக்கு ரூ.130 முதல் 140 வரை நேரடியாக கொள் முதல் செய்து வருகின்றன. எனவே, அமைச்சரின் அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும். அமைச்சரின் அறிவிப்பில் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் பல மாவட்டங் களில் இல்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். வாங்கப்படும் கொப்பரையை அரைத்து தேங்காய் எண்ணெய் தயாரித்து,நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தா லும், அல்லது கேரள மாநிலத்தைப் போல், கொள்முதல் செய்யப்படும் கொப்பரைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடலாம். அரசுக்கு போதிய லாபம் கிடைக்கும். கேரளமாநிலத்தில் உரித்த தேங்காய் கிலோ ரூ.51-க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் கொள்முதல் செய்ய வேண்டும்.கடந்த 8 ஆண்டுகளில் கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்திற்கு ரூ. 700கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு 9.38 சதவீத அளவிலான நிதி, சிறு திட்டங்களுக்கென வழங்கப்பட்டுள்ளது. எனவே, தென்னை வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 50 லட்சம்ஹெக்டேர் தென்னை மரங்கள் வறட்சியால் பட்டுப்போய்விட்டன. அரசு அதிகாரிகள் இதை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை எந்த விவசாயிக்கும்ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்பட வில்லை. எனவே, மரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை 50 சதவீத விவசாயிகளுக்கு வழங்காத நிலை உள்ளது. மேலும் தென்னைக்கு பயிர் காப்பீடு ஒரு சில ஏக்கருக்கு மட்டுமே பிரிமீயம் செலுத்தும் நிலை உள்ளது. எனவே, அனைத்து தென்னைமரங்களுக்கும் பயிர் காப்பீடு செலுத்த வழிவகை செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தரமற்றும் அனைத்து தென்னை விவசாயி களுக்கும் 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர்பாசனம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள்சங்கம் சார்பில் வரும் ஜூலை 30 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்ட ங்கள் நடத்தி மனுக் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.