tamilnadu

img

அவிநாசியில் அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது!

அவிநாசியில் அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி 12ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சாந்தியின் கணவரும், கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் (51) மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தரப்பில் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.   
இதை தொடர்ந்து, ராஜேந்திரன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், ராஜேந்திரன் கைது செய்யப்படாமல் இருந்தார். இதை தொடர்ந்து, ராஜேந்திரனை உடனடியாக கைது செய்து, உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய குழு கடந்த அக்.25-ஆம் தேதி அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து, தற்போது ராஜேந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும், சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக அதிமுக நிர்வாகி மூர்த்தி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.