எக்ஸல் (Excel) பொறியியல் கல்லூரி விடுதியில் உணவருந்திய 128 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம், பல்லக்கபாளையத்தில் எக்ஸல் (Excel) பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி விடுதியில் ஏறத்தாழ 10,000 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று உணவு, கட்டணமாக ஒரு ஆண்டிற்கு ஒரு மாணவனுக்கு 80 ஆயிரம் முதல் 1லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. கிட்டதட்ட 128 மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கல்லூரியின் உணவு கூடத்தை சீல் வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
