ஆந்திராவில் இரு பெண்கள் பலி ஒடிசாவில் பெரும் சேதம் இல்லை
‘மோந்தா’ புயல் ஆந்திராவில் செவ்வாயன்று இரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோனசீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரி ழந்துள்ளன. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 107 ரயில்கள், 18 விமான சேவை கள் ரத்து செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட மாண்டூஸ் புயலின் போது ஆந்திராவில் 226 கோடிகள் வரை விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது மோந்தா புயல் தாக்கத்தின் காரண மாக பாதிப்பு அதை விட அதிகமாக இருக்க லாம் எனவும் இது கணக்கெடுப்பிற்கு பிறகே தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் 1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 75 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா இப்புயலால் பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட வில்லை என அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்துள்ளார். எனினும் அம்மாநி லத்தின் சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரி வுகள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தது போன்ற பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஓடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 32,000 பேரை வெளியேற்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருந்த நிலையில்,அது முழுமை யடையவில்லை. வெறும் 17,817 நபர்களை மட்டுமே 2,000 க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட பாதிப்பு சிறிது தீவிரம டைந்து இருந்தாலும் அங்கு பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கும் அபாயம் ஏற்பட்டி ருக்கும் என அம்மாநில பாஜக அரசின் நிர்வாகத் தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் மோந்தா புயல் கரையை கடந்த நிலையில், ஆந்திராவில் மீனவர்களின் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பாதாள கங்கை என்று அழைக் கக்கூடிய பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள் ளது. இதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கிராமத்தில் வெள்ளமும் அதி கரித்ததில் வீடுகள் அடித்துச் செல்லப் பட்டன. 2,000க்கு மேற்பட்ட மின்கம்பங் கள் சரிந்த நிலையில் ஆந்திராவின் பல கிராமங்களில் இருள் சூழ்ந்தது.
தெலுங்கானாவுக்கு ரெட் அலர்ட் தெலுங்கானாவில், மோந்தா புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. தெலுங்கானாவில் புதனன்று மதியம் 1 மணி முதல் கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக கனமழை வரை பெய்யக் கூடும் எனவும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத் தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
