tamilnadu

img

மண் சாலையை தார்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

மண் சாலையை தார்சாலையாக மாற்ற வலியுறுத்தல்

தருமபுரி, அக்.28- செட்டிக்கரை ஊராட்சியில் உள்ள மண் சாலையை,  தார்சாலையாக மாற்ற வேண்டுமென அக்கிராம மக்கள்  மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி வட்டம், செடிக்கரை ஊராட்சிக்குபட்டது சாக்கன் கொட்டாய் கிராமம். இக்கிராமத்திற்கு பொது மக்கள் சென்றுவர செட்டிகரை கால்நடை மருத்துவ மனையில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வழியாக  செல்லும் மண் சாலையை, நீண்ட ஆண்டுகாலம் பயன்ப டுத்தி வருகின்றனர். பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாண வர்கள் இச்சாலை வழியாக மிதிவண்டியில் சென்று வரு கின்றனர். தனியார் பள்ளி வாகனங்களும் இக்கிரா மத்திற்கு வந்து செல்கின்றன. இச்சாலையை சீரமைப்ப தற்கு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலையோரமாக உள் ளது. ஆனால், அதற்கான பணிகள் நடைபெற வில்லை. இதனால் ஜல்லிகள் சாலையில் சிதறிக் காணப்படுகிறது. இதனால் இருச்சக்கர வாகனத்தில் சென்று வருபவர்கள் கீழே விழும் நிலைமைக்கு தள் ளப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறுகையில், சமீபத்தில் பெய்த மழையால் குண்டும், குழியுமான மண் சாலையில் தண்ணீர் நின்று  சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்க ளில் தெருசாலைகளில் உள்ள தெருவிளக்கு பழு தடைந்து இருண்டு காணப்படுகிறது. ஜல்லி நிறைந்த  மண்சாலையால் ஏராளமான விபத்து நடக்கிறது. எங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்கன்கொடடாய் கிராமத்திற்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் மண் சாலை யை தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.