அமைச்சர் ஆய்வு
திருப்பூர், அக்.29- திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, கனக தாரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை திங்களன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மருத்து வம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிக ளுக்கு மருந்துப்பெட்டகங் களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (ஆவின்) சுஜாதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.'
வேலியில் சிக்கிய சிறுத்தை: பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்
உடுமலை, அக்.29- உடுமலை அடுத்த கொழுமம் பகு தியைச் சேர்ந்த விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சங்கிலி இணைப்பு வேலியில், திங்களன்று சிறுத்தை ஒன்று சிக்கி இருந்துள்ளது. இதை கண்ட விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்துள்ளார். உடனடியாக வனத்துறை யினர் சிறுத்தை சிக்கி இருப்பதை உறுதி செய்து, பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல தடை விதித்தனர். இதை தொடர்ந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை மீது மயக்க மருந்து செலுத்தி, சிறுத்தையை பரிசோதித்தனர். சிறுத்தைக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுத்தைக்கு மருந்து கொடுக்கப்பட்டு நள்ளிரவு குழுமம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி ரிசர்வ் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடு வித்தனர்.