திருப்பூர் சந்திக்கும் நெருக்கடிக்கான தீர்வு நம் கையில் இல்லை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
திருப்பூர், அக்.29- தற்போது அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர் சந்தித்து வரும் நெருக்கடிக் கான தீர்வு நமது கையில் இல்லை, எனி னும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. தொழில் துறையினர் நம்பிக்கை இழக்க வேண்டாம் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகி ருஷ்ணன் திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தெரிவித்தார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகி ருஷ்ணன் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு பல்வேறு நிகழ்ச் சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந் தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலை வர் ஏ.சக்திவேல் வரவேற்றுப் பேசினார். இதில் திமுக, அதிமுக, மதிமுக உள் ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப் புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு துணை ஜனாதிபதிக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இதைதொடர்ந்து துணை ஜனாதி பதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகை யில், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி கள் என அனைத்து தரப்பினரிடம் இணைந்து பணியாற்றியுள்ளேன். விவ சாயத்திற்கு பிறகு அதிக அளவில் வேலைவாய்ப்பு தரக்கூடியது பனியன் தொழில்தான். தற்போது திருப்பூர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 50 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்நிலையில், அமெ ரிக்கா வித்துள்ள வரியால் ஏற்றுமதி கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்க னவே இதேபோல் பல்வேறு இடர்பாடு கள் வந்தபோது கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அந்த நெருக்க டியில் இருந்து மீள பல்வேறு நடவடிக் கைகளை எடுத்துள்ளனர். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக் கான தீர்வு நமது கையில் இல்லை. ட்ரம்ப் எப்போது எதை செய்வார் என்று அவ ருக்கே தெரியாது. இது தொடர்பாக அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசி னேன். அவரும் கடும் சவாலாக தான் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து பேச் சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். தொழில் துறையினர் நம் பிக்கை இழக்க வேண்டும். நாம் அமெ ரிக்காவுக்கு இருமடங்காக ஏற்றுமதி செய்யும் காலம் விரைவில் வரும் என் றார். ஏற்பாடுகளில் குளறுபடி: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறை யாக ஏற்பாடு செய்யாததால், பத்திரிகை யாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது. இதனால் பத்திரிகையாளர்கள் பலர் வெளியேறினர். மேலும், 100 க்கும் மேற்பட்ட போலி பாஸ்கள் அடித்து கட்சி யினர் சிலர் உள்ளே நுழைந்தால், கடும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும், கட்சியி னர் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி வரும் நிகழ்ச்சிக்கு இப்படி தான் ஏற்பாடு செய்வதா என புலம்பிச் சென்றனர்.
மக்களை அலைக்கழித்து அவதிப்படுத்தியது ஏனோ?
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை காரணமாகக் காட்டி கடந்த மூன்று நாட்களாக திருப்பூரில் காவல் துறையினர் போக்குவரத்து மாற் றம், சாலையோரம், கடைகள், அலுவலகங்கள் முன்பு வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டனர். புதன்கிழமை தாராபு ரம் சாலையில் நடைபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு விழாவை ஒட்டி அந்த சாலை மட்டுமின்றி, நகரின் தெற்குப் பகுதி முழுவதும் ஏகப்பட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் திருப்பூர் மக்கள், வியாபாரிகள், வாகன ஓட் டிகள், வயதானவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் அலைக்கழிக்கப்பட் டனர். கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதற்கு முன்பு ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு வந்திருக்கிறார். இதே வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண் டிருக்கிறார். அப்போதெல்லாம் இது போன்ற அதீத நெருக்கடிகள் கொடுக்கப் படவில்லை. இது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை பிரம் மாண்டப்படுத்திக் காட்டுவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த ஏற்பா டாக இருக்கிறது என்று பலர் ஐயம் தெரிவித்தனர்.
