பழுதடைந்து காணப்படும் நூலகக் கட்டிடம்: புதுப்பிக்க எரிசனம்பட்டி வாசகர்கள் வேண்டுகோள்
உடுமலை, அக்.29- எரிசனம்பட்டி பழுத டைந்து காணப்படும் நூலகக் கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என நூலகத்தை பயன்படுத்தும் வாசகர் கள் கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டி கிராமத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலகக் கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தினசரி ஏராளமான வாச கர்கள் வந்து படித்து செல்கின்றனர். மேலும், இந்த நூலக வளாகத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடமும் உள்ளது. இந்த கட்டி டம் பூட்டியே கிடப்பதால், கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், பாம்புகள், பூச்சிகள் நூலகத்திற்குள் வரு கின்றன. எனவே, கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புதர்களை வெட்டி அகற்ற வேண் டும். நூலக கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். அதேபோல், செல்லப்பம்பாளையம் ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடமும் பூட்டியே கிடக்கிறது. யாருக்கும் பயனின்றி உள்ள இந்த கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
