tamilnadu

img

நீரில் மூழ்கிய செங்காளிபாளையம் சாலை மாற்றுப் பாதையாக பாலம் அமைக்க சிபிஎம் கோரிக்கை

நீரில் மூழ்கிய செங்காளிபாளையம் சாலை  மாற்றுப் பாதையாக பாலம் அமைக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், அக். 29 - குன்னத்தூர் பேரூராட்சி செங்காளிபா ளையம் ஊருக்குச் செல்லும் தார்ச் சாலை  குன்னத்தூர் குளம் நிரம்பியதால் மூழ்கி யுள்ளது. எனவே மாற்றுப் பாதையாக பாலம்  அமைத்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. குன்னத்தூர் குளத்தில் நீர் நிரம்பிய கார ணத்தால், குன்னத்தூர் பேரூராட்சி செங்கா ளிபாளையம் ஊருக்கு செல்லும் தார்ச்  சாலை, மூழ்கியுள்ளது. இதற்கு மாற்று ஏற்பா டாக, மேம்படுத்தப்பட்ட பாலம் கட்ட வேண் டும் என்று கோரியும், பொன் காளியம்மன் நக ருக்கு ஆற்று குடிநீர் குழாய் விரைவாக பதிக்க  வேண்டும் என கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் நகரக் கிளை சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் பால சுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.  இதில் குன்னத்தூர் நகர கிளைச் செய லாளர் பி.சின்னச்சாமி தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,  தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ். கே.கொளந்தசாமி ஆகியோர் கலந்து கொண் டனர்.  இந்த மனுவை பெற்றுக் கொண்ட செயல் அலுவலர், கோரிக்கை குறித்து நடவ டிக்கை எடுப்பதாகவும், நீர் நிலையில் சாலை  செல்வதால் பாலம் கட்டுவதற்கு நீர்வளத் துறை அனுமதி பெற வேண்டும், அதற்கான கடிதம் எழுதப்பட்டுள்ளது, உரிய தொகை ஒதுக்கீடு பெற வேண்டி உள்ளது. அதே போல் பொன்காளியம்மன் நகருக்கு குழாய்  பதிப்பது மழை காரணமாக தடைப்பட்டுள் ளது. அந்தப் பணி விரைந்து செய்து முடிக் கப்படும் எனவும் செயல் அலுவலர் பால சுப்பிரமணியம் உறுதி அளித்தார்.