தொடர் மின்வெட்டால் விவசாயிகள், தொழில் முனைவோர் பாதிப்பு
தருமபுரி, அக்.29- ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டை சீர்படுத்தி, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக சிறு தொழில் முனைவோர், விவசாயி கள், பொதுமக்கள் மிகக் கடுமை யாக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஒகே னக்கல், ஊட்டமலை, நாட்றாம் ்பாளையம், தொட்டமஞ்சு ஆகிய பகுதிகளில் தொடரும் மின் வெட்டை சீர்படுத்தி, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பென் னாகரம் துணை மின் நிலையத்தில் குறைந்த மின்னழுத்தம் கொண்ட 62 எம்வி மாற்றி 240 எம்வி கொண்ட துணை மின் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். நாட்றாம் பாளையம், தொட்டமஞ்சு பகுதி யை மையப்படுத்தி கூடுதலாக உயர் மின்னழுத்தம் கொண்ட மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைத்து இப்பகுதியை அஞ்செட்டி துணை மின் நிலையத்தோடு இணைக்க வேண்டும். ஒகேனக்கல் வனப்பகு தியில் பூமிக்குள் செல்லும் கேபிள் பழுதானால் அதை சரி செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களை பணி யில் அமர்த்த வேண்டும். மின் தட் டுப்பாடு மற்றும் பற்றாக்குறையை போக்க ஓகேனக்கல் நீர்மின் திட் டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் மேற்கு ஒன்றியம் மற்றும் அஞ் செட்டி வட்டக்குழு சார்பில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒகேனக்கல் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் பென்னாகரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ. ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றி னார். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் அ.குமார், மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பிரகாஷ், அஞ் செட்டி வட்டச் செயலாளர் பி.தேவ ராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.ரவி, கே.அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், ஒகேனக்கல் கிளைச் செயலா ளர் என்.மாரிமுத்து நன்றி கூறி னார்.
