செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திடுக
கோவை, அக்.29- எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம் பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு கைவிட வேண் டும். நடைமுறையிலிருந்து பறிக்கப் பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 2 (ANS) பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். தேர்தல் வாக் குறுதி எண்:356யை தமிழக அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப் பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத் தினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் இரா.ராம லட்சுமி தலைமை வகித்தார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன் துவக்கவுரையாற்றினார். கோரிக் கையை விளக்கி மாவட்டச் செயலா ளர் சே.தங்கமுனீஸ்வரி உரையாற்றி னார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.பிரக லதா, அரசு ஊழியர் சங்க மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் மாராத்தாள் நன்றி கூறினார். இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
