tamilnadu

கடன்களை திருப்பி செலுத்த 2 ஆண்டு அவகாசம் வழங்க ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

கடன்களை திருப்பி செலுத்த 2 ஆண்டு அவகாசம் வழங்க ஆலோசனைக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூர், அக்.29- அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதி யில் ஏற்பட்டுள்ள சவால்களை சமா ளிக்க தற்போது உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 2 ஆண்டு கால  அவகாசம் வழங்க வேண்டும் என ஆலோ சனைக் குழு கூட்டத்தில் திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத்தின் கௌரவத் தலை வர் சக்திவேல் வலியுறுத்தியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங் களுக்கான கடன் வழங்கும் முறையை பரிசீலிக்கும் நிலையான ஆலோ சனைக் குழுவின் 30 ஆவது கூட்டம்  கோவையில் திங்களன்று நடைபெற் றது.  இந்திய ரிசர்வ் வங்கியின் துணை  ஆளுநர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பூர்  ஏற்றுமதியாளர் சங்கத்தின் சார்பில் கௌரவத் தலைவர் சக்திவேல், பொரு ளாளர் கோபாலகிருஷ்ணன்,  இணைச்  செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டிருந்தனர். இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங் கத்தின் கௌரவ தலைவர் சக்திவேல் கூறியதாவது,  கடந்த நிதி ஆண்டில் ரூ. 44,747 கோடி மதிப்புள்ள பின்னலா டைகளை ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது. இவற்றில் 95 சதவீதம் சிறு குறு  மற்றும் நடுத்தர நிறுவனங்கள். இந்தியா வின் மொத்த ஆயத்த ஏற்றுமதியில் 68  சதவீதம் பங்களிப்பை திருப்பூர் அளித்து வருகிறது. சமீபத்திய அமெரிக்க வரி விதிப்பு உயர்வால் திருப் பூர் ஏற்றுமதியில் சில சவால்கள் ஏற் பட்டுள்ளது. அதை சமாளிக்க தற்போது  உள்ள கடன்களை திருப்பி செலுத்து வதற்கு 2 ஆண்டு கால அவகாசம், வட்டி  மானிய  திட்டம் முழுமையாக செயல்ப டுத்த வேண்டும்.  கடன் விண்ணப்பங்க ளுக்கு வங்கிகள் நேரத்திற்குள் பதில் அளிக்கும் நடைமுறை அமைத்தல் வேண்டும். ரிசர்வ் வங்கியின் இடிபி எம்எஸ் தளத்தின் பதிவு செய்யும் செயல் முறையை தெளிவுபடுத்த வேண்டும்.  இடிபிஎம்எஸ் மற்றும் சுங்கத்துறை  இடையேயான ஒருங்கிணைப்பு சிக்கல் களை தீர்த்தல் மற்றும் சிறு மதிப்பிலான ஏற்றுமதி பரிவர்த்தனைகளின் முடிவுக ளின் செயல்முறைகளை எளிமைப்ப டுத்துவது தற்காலிகத் தேவையாக உள் ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப் பட்டாலும், அதன் நன்மைகள் வங்கிக ளின் வழியாக தொழில் முனைவோ ருக்கு உடனடியாக சென்றடைய வில்லை.  இது தொடர்பாக வங்கிகள்  தனிப்பட்ட விண்ணப்பம் இல்லாம லேயே செயல்பட வேண்டும்.  கடன் உத் திரவாத திட்டங்கள் தொடர்பாக பல சலு கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அரசு  அளித்தாலும், சில வங்கியில் அவற்றை  அடிப்படை மட்டத்தில் சரியாக நடை முறைப்படுத்தவில்லை.  அதோடு பிஎம்  மித்ரா பார்க் திட்டம் இந்திய ஜவுளி துறை யின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக் கிய முயற்சி. அங்கு தொழிற்சாலைகள் அமைக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் வழங்க முன் வர வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களின் நீடித்த வளர்ச்சிக்காக ரிசர்வ் வங்கிகள்,  தொழிற்சார்ந்த சங்கங் கள் மற்றும் துறை அமைச்சகம் ஆகிய வற்றை உள்ளடக்கிய ஒரு இணை ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். மேலும், அவை குறிப்பிட்ட  நாட்களில் கூடி தொழில் துறையில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றி  விவாதிக்க வேண்டும் என பரிந்து ரைத்தார். மேலும் என்பிஏ வகைப்படுத்தும் காலத்தை 90 நாட்களில் இருந்து  180 நாட்களாக நீட்டிக்க வேண்டும். சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  துறைக்கு தனித்துவமான கடன் கொள்கை வழிகாட்டுதல்கள் அமல்ப டுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்ச கத்தின் செயலாளர் எஸ்.சி.எல்.தாஸ்  இணைய வழி மூலம் கலந்து கொண்டி ருந்தார்.