ஆசிய போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை எட்வினா ஜேசன் சாதனை புரிந்துள்ளார்.
3ஆவது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைனில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மெட்லி தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் மற்றொரு வெள்ளிப் பதக்கமும் வென்று திருநெல்வேலியைச் சேர்ந்த எட்வினா ஜேசன் அசத்தியுள்ளார்.
