games

img

விளையாட்டு

லா லிகா - எல் கிளாசிகோ பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

2025 -26ஆம் ஆண்டுக் கான லா லிகா தொட ரின் 95ஆவது சீசன் ஸ்பெயின் நாட் டின் முக்கிய நகரங்களில் நடை பெற்று வருகிறது. லா லிகா தொடர் ஸ்பெயின் நாட்டின் உள்ளூர் தொட ராக இருந்தாலும், உலக பிரசித்தி பெற்றது ஆகும். முன்னணி வீரர்கள் விளையாடி வருவதாலும், ஒவ்வொரு அணிகளின் அதிரடி ஆட்டம் மனம் கவர்ந்த நிலையில் இருப்பதால் லா லிகா கால்பந்து உலகின் முக்கிய தொடராக உள்ளது. இந்நிலையில், லா லிகா தொடரின்  “எல் கிளாசிகோ (வரலாற்று பகைமை உடைய விளையாட்டு சார்ந்த  மோதல்)” போட்டி என அழைக்கப் படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஆட்டம் (லீக்) இந்திய நேரப்படி ஞாயி றன்று நள்ளிரவு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள சாண்டியா கோ மைதானத்தில் தொடக்கம் முதலே  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பார்சிலோனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அபார வெற்றி பெற் றது. ரியல் மாட்ரிட் அணி சார்பில் மாப்பே (பிரான்ஸ்), பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து) தலா ஒரு கோல் அடித் தனர். பார்சிலோனா தரப்பில் அந்த லோபஸ் (ஸ்பெயின்) ஒரு கோல் அடித்தார்.

போட்டி முடிந்த பின்பு இரு அணி வீரர்களுக்கும் கடும் வாக்குவாதம்

ஆட்டம் முடிந்த பின்பு பார்சிலோனா - ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு இடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரியல் மாட்ரிட் வீரர்களான டேனி கார்வஜால் (ஸ்பெயின்), வினிசியஸ் ஜூனியர் (பிரேசில்) மற்றும் பார்சிலோனாவின் லாமின் யமாலுடன் (ஸ்பெயின்) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த மோதலுக்கு காரணம் போட்டியின் போது வினிசியஸ் ஜூனி யரின் ஜெர்சியை (உடை) பிடித்து இழுத்து பந்தை நகர்த்த விடாமல் பார்சி லோனா வீரர்கள் இடர்பாடு அடாவடி யில் ஈடுபட்டதே காரணம் எனக் கூறப் படுகிறது. அதனால் போட்டி முடிந்த பின்பு கார்வஜால் மற்றும் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் யமாலை நோக்கி, “இப்போது பேசு. நீ ஏன் அவ்வளவு தூரம் பேசிக்கொண்டிருந்தாய்? இப்போது பேசு” என்று வெற்றி பெற்றதை ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த யமால் கூச்சலிட இரு அணி வீரர்களுக்கும் வழக்கம் போல வார்த்தை மோதலுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்  இரு அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மோதலை நிறுத்தி முடிவுக்கு கொண்டு வந்தனர்.  இப்போது மட்டுமல்ல மெஸ்ஸி (பார்சிலோனா) - ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) ஆகியோர் விளையாடிய காலங்களிலும், பார்சிலோனோ - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையே கைகலப்புடன் மோதல் ஏற்பட்ட வரலாறும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உலகக்கோப்பை நாளை முதல் அரையிறுதி ஆட்டங்கள்

13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் ஞாயிறன்று நிறைவு பெற்ற நிலையில், லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட களைப்பை போக்க திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் உலகக்கோப்பைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதன்கிழமை அன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள்

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடம் : கவுகாத்தி, அசாம் நேரம் : மதியம் 3:00 மணி (புதன்)

இரண்டு ஆட்டங்களும்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)  (இனி இந்தியாவில் மட்டுமே ஆட்டங்கள்)

இரண்டு ஆட்டங்களும்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)  (இனி இந்தியாவில் மட்டுமே ஆட்டங்கள்)

பிரபல ஜூ-ஜிட்சு வீராங்கனை தற்கொலை

ஜப்பானிய தற்காப்புக் கலையான ஜூ-ஜிட்சு (Jujutsu) விளையாட்டின் சர்வதேச வீராங்கனையும், நாட்டின் பிரபல தற்காப்புக் கலை பயிற்சியாளரான ரோகிணி கலாம் (வயது 35) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.  இந்நிலையில், ஞாயிறன்று பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின்  தேவாஸில் உள்ள தனது வீட்டில் ரோகிணி கலாம் தற்கொலை செய்து கொண்டார். தனது அறையில் தூக்கில் தொங்கிய ரோகிணியின் சடலத்தை மீட்ட, காவல்துறை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.