வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பெயர் நீக்கல், புதிய பெயர் சேர்த்தல், புகார்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற வாக்காள்ர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்கட்சிக்கு ஆதரவானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. மேலும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
