tamilnadu

img

மக்களை வீடு வீடாக சந்தித்து ஆதரவு திரட்டுவோம் உள்ளாட்சி தேர்தல் ஆயத்த கூட்டத்தில் கே.தங்கவேல் உரை

திருப்பூர், டிச. 11 - தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பணபலம், லஞ்ச, லாவண்யத்திற்கு எதிராக மக்களை வீடு, வீடாகச் சந்தித்து ஆதரவு திரட்டி வெற்றி பெறு வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.தங்கவேல் கூறினார். திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேர்தல் ஆயத் தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைச் செய லாளர் கே.கருப்பசாமி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பங்கேற்று கே.தங்கவேல் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் எவ்வளவு முக்கியத்து வமானது என்ற விழிப்புணர்வு பலரிடம் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத நிலையில், கிராமங்கள், நகரங்களில் குடி நீர், சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் முடங்கிக் கிடக்கி றது. உள்ளாட்சிகளுக்கு மத்திய  அரசு தர வேண்டிய நிதியைத் தராமல் இருக்கின்றனர். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, ஜனநாயகரீதியான முக்கியமான தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்.  தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து இத்தேர்தலைச் சந்திக்கிறது. இத்தேர்தலில் பணபலம், சாதி செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங் களை வைத்து மற்ற கட்சிகள் சந்திப்பார்கள். ஆனால் மார்க் சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி பல்வேறு போராட் டங்களை நடத்தி உள்ளது. எனவே மக்களிடம் செல்வோம், வீடு, வீடாக மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவோம். தேர்த லுக்கு குறுகிய நாட்களே இருக்கும் நிலையில், கிராமங்களில் வீடு, வீடாக பல முறை நேரடியாக மக்களைச் சந்தித்துப் பேசினால் நிச்சயம் ஆதரவைப் பெற முடியும். மற்றவர்கள் கூட்டமாக நூறு, இருநூறு பேராக ஊருக் குள் வலம் வருவது போல் நாம் செய்ய வேண்டியதில்லை. நேரடி யாக மக்களிடம் சிறு, சிறு குழுவா கச் சென்று பேசினாலே அவர் கள் நிச்சயம் நமக்கு ஆதரவு தரு வார்கள். நாம் வெற்றி பெறு வோம். இடுவாய் ஊராட்சியைப் பொறுத்தவரை தோழர் கே.ரத்தி னசாமி தியாகம் செய்த பகுதி. இந்த ஊராட்சியின் வெற்றியைத் தமிழகமே எதிர்பார்க்கும். கூட்ட ணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடப் பகிர்வு முடிவடைந்த பின் அதற்கேற்ப நாம் இத்தேர்த லைச் சந்தித்து வெற்றி பெறு வோம் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சி யின் முன்னாள் வார்டு உறுப்பி னர் ஈஸ்வரன், கட்சியின் ஒன்றி யச் செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.கணேசன் ஆகியோர் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் இடுவாய் பகு தியைச் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்தலைச் சந்திப்பதற்கு நிதி வசூலிப்பதென தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்திலேயே பலரும் எழுந்து நிதி வழங்குவதாக அறி வித்தனர். இந்த கூட்டத்திலேயே ரூ.65 ஆயிரம் நிதி தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண் ணிகிருஷ்ணன், இடுவாய் மேற்கு பகுதி செயலாளர் குமரவேல் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.