திருப்பூர், செப். 3 - கோவை இருகூரிலிருந்து தேவன கொந்தி வரை எண்ணெய்க் குழாய்த் திட்டம் தொடர்பான அனைத்து நடவ டிக்கைகளையும் நிறுத்தவும், இத்திட் டத்தை சாலையோரமாக மாற்று வழியில் செயல்படுத்த வலியுறுத்தி யும் ஆறு மாவட்டங்களில் செப். 15-ஆம் தேதி முதல் தொடர் காத்தி ருப்புப் போராட்டம் நடத்த ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசா யிகள் கூட்டமைப்பு தீர்மானித் துள்ளது. விவசாயிகள் கூட்டியக்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை இரவு காணொளி வாயிலாக நடை பெற்றது. இக்கூட்டத்தில் மேற்கொள் ளப்பட்ட முடிவுகள் வருமாறு, கோவை இருகூரிலிருந்து தேவனகொந்தி வரை ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய்த் திட்டத்தை மாற்று வழியில் சாலையோ ரமாகக் கொண்டு செல்லக்கோரி கடந்த இரண்டு வருடமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இத்திட்ட அதிகாரி களும், தமிழக அரசின் நிர்வாகமும் இணைந்து தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசா யிகள் அனுமதி இல்லாமலும், விவசா யிகளை ஏமாற்றும் வகையிலும், அவர்களது நிலத்திற்குள் சென்று நில அளவை செய்வதும், மண் பரிசோ தனை எடுப்பதும் என செயல்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே திரண்டு தடுத்து நிறுத்தி போராடி வருகிறார்கள். இவ்வா றாக இத்திட்டத்திற்கு எதிராகக் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 19 ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டமும், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டம் அழகுமலையில் ஐடிபிஎல் நிர்வாகத்திற்குத் துணையாக வந்த வட்டாட்சியரும், காவல்துறை அதிகா ரிகளும் அளவீடு செய்வதைத் தடுத் தால் விவசாயிகள் மீது வழக்குப்ப திவு செய்யச் சொல்லி உத்தரவு வந்துள் ளதாக மிரட்டியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்துடன் 28 ஆம் தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் பரிசோதனை நடத்தியதை விவசா யிகள் எதிர்த்து திருப்பி அனுப்பி உள்ள னர். சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் பட்லூர், சேலம் மாவட்டம், எடப்பாடி ஆகிய இடங்களில் மண் பரிசோதனை எடுக்க வந்த அலுவ லர்களை விவசாயிகள் கடுமையான முறையில் போராடி திருப்பி அனுப்பி னார். விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் இச்சூழலில், மத்திய அரசு இத்திட்டப் பணிக்கான நிதியை ரூ. 678 கோடியிலிருந்து தற்போது ரூ.1, 472 கோடியாக உயர்த்தி அறிவித் திருப்பதும், இத்திட்டத்தை முடிப்ப தற்கான காலத்தை 2021ல் இருந்து 2022 நவம்பர் வரை நீட்டித்து இருப்பதும் பாதிக்கப்பட்ட விவசாயி களின் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
ஆகவே இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, தமிழக அரசு கெயில் குழாய் திட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, இத்திட்டத்தையும் சாலையோரமாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். எனவே உடனடியாக இத்திட்டம் சம்பந்தமான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். இக்கோரிக்கை மீது உறுதியான முடிவை தமிழக அரசு அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவதை அடுத்து, செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தைத் தொடங் குவது என முடிவெடுக்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் மாவட்டத் திற்கு ஒரு மையம் என்ற முறையில் இப்போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் அனைத்து விவ சாயிகளும் திரளாக பங்கேற்க வேண்டும். இப்போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தலை வர்கள் கலந்து கொள்கின்றனர் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்த லைவர் ஏ.எம்.முனுசாமி பங்கேற்றார். மேலும் இக்கூட்டத்தில் திமுக விவ சாயத் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ காவேரி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் மு.ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் திருப்பூர் ஆர்.குமார், நாமக்கல் பி.பெருமாள், சேலம் இராமமூர்த்தி, தருமபுரி சோலை அர்ஜுனன் மற்றும் காடச்ச நல்லூர் செல்லமுத்து ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் கலந்து கொண்டார்.