tamilnadu

img

விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலம், செப்.3 - விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கூட்ட மைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் செவ்வாயன்று நடைபெற்றது. கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகுந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  சார்பில்  எண்ணெய்குழாய் பதிக்கும் திட் டத்தை மத்திய. மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகிறது. இத்திட் டம் கோவை,  திருப்பூர், ஈரோடு, நாமக் கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் விளை நிலங்கள் வழியாக நிறைவேற்ற இருக்கிறது. இதனால் விவசாயிகளும், விளை நிலங்களும் பாதிக்கப்படும் என்பதால் மேற்கண்ட திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், சங்ககரி ஐவேலி கெமிக்கல்ஸ் பிள்ளையார் கோவில் திடலில் செவ்வாயன்று நடை பெற்ற இந்த கையெழுத்து இயக் கத்தை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொது செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் துவக்கி வைத்தார்.   இந்நி கழ்ச்சியில் எடப்பாடி தொகுதி முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.காவேரி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள், சங்ககிரி தாலுகாச் செயலாளர்  ராஜேந் திரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள பல  நாயக்கன்பாளையம் பகுதியில் விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் நடைபெற்ற நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜவேலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சாமி வரவேற்றுப் பேசினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் துவக்கி வைத்து பேசுகையில், ஏற்கனவே விவசாயிகள் கெயில் எரிவாயு திட்டத்தின் காரணமாகவும், உயர் மின்னழுத்த கோபுரங்களிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  தற்போது ஐடிபிஐ எனப்படும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது என கூறி அதற்கு தடை விதித்திருந்தார். தற் போது உள்ள இந்த அரசு விவசாயிக ளுக்கு மேலும் மேலும் இன்னல்களை அளித்து வருகிறது.  இந்த திட்டத்தை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்பதை வலியுறுத் தியும், நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய் பதித்து கொண்டு செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை  தொடங் கப்பட்டது. தமிழக அரசு இது தொடர் பாக விவசாயிகளை அழைத்து பேசி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து மனுக்கள் அனைத்தும் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரி வித்தனர்.