tamilnadu

img

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற அவலங்கள் நிறைந்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி சிபிம் குற்றச்சாட்டு

அவிநாசி, ஜூன் 1-அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனவும், அவலங்கள் நிறைந்த ஊராட்சியாக வேலாயுதம்பாளையம் ஊராட்சியாக செயல்பட்டுவருவாதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. அவிநாசி ஒன்றியத்தில்உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ளரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் இயங்குகிறது. அதன் அருகில் அங்கன்வாடி மையத்தின் கழிப்பிடம்அமைந்துள்ளது.இங்கு சிறுநீர் கழிப்பதற்கு மறைப்பாக ஓலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேலாயுதம்பாளையம்செல்லும் பாதையில் 2001ஆம் ஆண்டு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டன. இதில் தண்ணீர் மற்றும் சுகாதாரமின்றியும் உள்ளது.  இந்த கழிப்பிடத்தின் அருகில் சாக்கடை நீர் தேங்கி  உள்ளது. வேலாயுதம்பாளையம் பொது மயானத்தில் கோழி கழிவுகளும், ஊர் குப்பைகள் கொட்டப்படுகின்றன.  இதேபோல் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  ரூர்பன் திட்டத்தில் கீழ் கட்டப்பட்ட தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பாரதி நகர் பகுதியில் சாக்கடை  பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் உள்ள சாலையும் பழுதடைந்து உள்ளதால் மழை காலத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அவலங்கள் நிறைந்த ஊராட்சியாக வேலாயுதம்பாளையம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் சண்முகம் கூறுகையில், 2001-2006ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த சாமியப்பன் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது குடிநீர் பிரச்சனை என்பது வெகுவாக இல்லை. மேலும் சிறப்பான ஊராட்சியாக செயல்பட்டு வந்தது. தற்போது ரேசன் கடை  பழுதடைந்த கட்டிடத்தில் 3 வருடங்களுக்கு மேலாக செயல்படுகிறது. இதனை சீர் செய்ய அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ப.தனபாலிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் வாடகைகட்டிடத்தில் ரேசன் கடைசெயல்பட்டு வருகிறது.மேலும் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும்  அவதிக்  குள்ளாகிவருகின்றனர். ஆட்டையாம்பாளையம், 5 கிராமங்களின் மையப்பகுதியாகும். இங்கு தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் நிறுத்தங்களில்களில் நிற்காமல் செல்கின்றது. மேலும் முறையாக போக்குவரத்து சிக்னல்கள் செயல்படுவதில்லை. இதனால் விபத்துகள்  ஏற்படுகின்றது. ஆட்டையாம்பளையத்திலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் குறுகியதாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாரதி நகர் பகுதியில் 2000ஆம்  ஆண்டு போடப்பட்ட சாக்கடை உரிய பாராமரிப்பு இல்லாததன் காரணமாக கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. பாரதி நகர் இரண்டாவது காலனி பகுதியில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் தனிநபர் சாலையில் தென்னை மரத்தை வைத்து ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். கருணைபாளையம் பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து நிலையில் உள்ளது. ஊராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை, சாலை வசதிகள் இன்றி காணப்படுகின்றன. இத்தகைய அவலங்கள் நிறைந்த ஊராட்சியாக வேலாயுதம்பாளையம் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து ஞாயிறன்று  வேலாயுதம்பாளையம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.