உடுமலை, ஆக. 4- உடுமலை அருகே பராமரிப் பின்றி வீட்டுவசதி வாரிய குடியி ருப்புப் பகுதி குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு, சமூக விரோத செயல்களின் புகலிடமாக மாறி யுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அருகே மருள்பட்டியில் கடந்த 1994 ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தால் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் 300 வீடு கள் கட்டப்பட்டன. ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் வீடுகளும், மேல்நிலைத்தொட்டி உட்பட கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. களிமண் பகுதியில் பெயரளவிற்கு கட்டப் பட்ட வீடுகளை ஏலம் விடும் போது சிக்கல் ஏற்பட்டது.மேலும் இந்த குடியிருப்பு போதிய பேருந்து வசதி இல்லாத பகுதியில் அமைந் திருந்தது. மேலும், தரமில்லாத கட்டுமானம் உள்ளிட்ட காரணங் களால் வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பினர் முன்வரவில்லை. இதனால் 300 வீடுகளும் காட்சிப் பொருளாக மாறி, 20 ஏக்கர் பரப்பில் அமைந்த குடியி ருப்பு வளாகம் முழுவதும் பராம ரிப்பு இன்றி புதர் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலை யில் கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை ஏலம் விட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவை போதிய பலன் அளிக் காத நிலையில் வீடுகளில் இருந்த சன்னல், கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் கணாமல் போனது. தற்போது வீட்டின் சுவர்கள் மட்டுமே காணப்படுகிறது. இந்நிலையில் புதர்மண்டி இடிந்து கிடக்கும் வீடுகள் தற்போது சமூக விரோத செயல் களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளிலி ருந்து கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்பட்டும் இடமாகவும் மாறி வருகிறது. இரவு நேரங்க ளில் நடைபெறும் இந்த அத்து மீறல்களால் குடியிருப்பு வளாகம் குப்பைக்கிடங்காக மாறி வருகி றது. இதுகுறித்து அருகிலுள்ள கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், வாரியமும், அரசும் நடவடிக்கை எடுக்குமா! - மகாதேவன்