tamilnadu

img

பனியன் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தையை துவங்கிடுக உற்பத்தியாளர் சங்கங்களுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

திருப்பூர், ஆக. 30 – திருப்பூர் பனியன் தொழிலாளர்க ளின் முந்தைய சம்பள ஒப்பந்தம் காலாவதியான நிலையில், புதிய சம்பள உயர்வு வழங்குவது தொடர் பான ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பனியன் உற்பத்தியாளர் சங்கங்க ளுக்கு, பனியன் தொழிலாளர் சங்கங் கள் கோரிக்கை விடுத்துள்ளன. திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவ லகத்தில் பனியன் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பனி யன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே கடந்த மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்து விட்டது. இதையடுத்து புதிய சம்பள உயர்வு கோரிக்கை உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பனியன் உற்பத்தியாளர் சங்கங்க ளுக்குத் தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பி இருந்தன. எனினும் எதிர்பா ராத விதமாகக் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் காரண மாக சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறை வேற்றுவது தொடர்பாகப் புதிய பேச்சுவார்த்தையைத் தொடங்க இய லாத நிலை இருந்தது.  தற்போது ஊரடங்கில் பல தளர்வு கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பனியன் உற்பத்தியை அதிகரிக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம் அத்தியாவ சியப் பொருட்களின் விலைவாசி உயர்வு முன்பைக் காட்டிலும் அதிக ரித்து வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் போதிய வருமான மின்றி சொல்லொனா துயரத்தை அனு பவித்து வருகின்றனர். ஒப்பந்தக் காலம் முடிந்து ஐந்து மாதம் கடந்து விட்ட நிலையில், மேலும் காலதாம தம் ஏற்படாமல் சம்பள உயர்வு உள் ளிட்ட தொழிலாளர் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க உற்பத்தியாளர் சங்கங் கள் முன்வர வேண்டும். பனியன் உற்பத்தி அதிகரித்து தொழிலாளர் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே தொழிற்சாலைகளில் அரசு வழிகாட்டு தல்களின்படி முகக் கவசம் (மாஸ்க்), சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலை நிர்வாகங்கள் செய்து தர வேண்டும். பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரி சோதனைகள் செய்வதையும் பனி யன் தொழிற்சாலை நிர்வாகங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும் என சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஏடிபி, ஐஎன்டியுசி, எம்எல்எப், எச்எம்எஸ் ஆகிய சங்கங்கள் வலியுறுத்தி உள் ளன. இது தொடர்பாக திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கம் (டிஇஏ), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியா ளர் சங்கம் (டீமா), நிட்மா ஆகியவற் றின் தலைவர், செயலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர். முன்னதாக, இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடி யுசி தலைவர் சி.பழனிச்சாமி, செயலா ளர் என்.சேகர், ஜெகநாதன், எல்பிஎப் நிர்வாகி பூபதி, ஐஎன்டியுசி தலைவர் அ.பெருமாள், செயலாளர் எ.சிவ சாமி, ஏடிபி நிர்வாகி விஸ்வநாதன், எம்எல்எப் செயலாளர் மனோகரன், எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர்.