திருப்பூர், ஆக.13- திருப்பூரில், திருமண நடத்த அந்தந்த பகுதிகளுக்குட் பட்ட கோட்ட அலுவலகத்திலேயே விண்ணப்பித்து அனு மதி பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித் துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவானது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது திரு மணம் நடத்திட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கார ணமாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வழங்கப் பட்டு வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு ஆக. 13 ஆம் தேதி முதல் திருமண நிகழ்விற்காக அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட கோட்ட அலு வலகத்திலேயே விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூர் வடக்கு / தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவல கங்களில் விண்ணப்பமளித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜ யகார்த்திகேயன், கேட்டுக் கொண்டுள்ளார்.