tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

கோவை, ஜூலை 15– மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியம் காரண மாக மாற்றுத்திறனாளிகள் அலைக் கழிக்கப் படுவதாக  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.  கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் திங்களன்று நடை பெறுகிறது. இதில் ஏராளமான பொது மக்கள் மனு அளித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றால் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை யோடு பொதுமக்கள் மனுக்களாக அளித்து வருகின்றனர். ஆனால் ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள சில அதி காரிகள் திங்களன்று நடைபெறும் மனு நாள் கடமைக்காக நடத்தப்படு வதாக அலட்சியப்படுத்தி வருவதும் தொடர்கிறது.  

இதன் ஒருபகுதியாக திங்களன்று ரத்தினபுரி உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்வேறு மாற்றுத்திறனாளி கள் தங்களின் கோரிக்கையின் மீது அரசு பரிவு காட்ட வேண்டும் என மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வரும் பொது மக்களே மாற்றுத்திறனாளிகளின் நிலை கண்டு பரிவு காட்டி வருகின் றனர். ஆட்சியர் அலுவலகத்தில் குறை கேட்கும் கூட்டத்தில் அமர்ந்துள்ள தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை எரிச்சலுடன் பெற்றதும், அலட்சிய மாய் பதில் அளித்து அலைகழிக்க வைத்தது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.  

இதுகுறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றம் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் செயலாளர் எஸ்.புனிதா கூறுகை யில், பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் போல மாதம் ஒருநாள்  மாற்று திறனாளிகளுக்கும் சிறப்பு குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் அலுவல கத்தில் நடத்தப்படும் இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லல் படா மல் இருக்க அரசு மருத்துவர்கள் பங்கேற்கச் செய்து அக்கூட்டத்தி லேயே மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் அளவுகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

அதிகாரிகள் பலருக்கு மாற்றுத்திறனாளிகளின் துன்ப துயரங்கள் குறித்து ஏதும் அறியாத நிலையிலேயே இருக்கின்ற னர். அலட்சியமாக பதில் அளிப்பது, அலைகழிப்பது என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது.  நேற்றும்கூட இருபதுக்கும் மேற் பட்ட மாற்றுத்திறனாளிகள் (இதில் நடக்க முடியாதவர்களும் உள்ளனர்) ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தனர். மற்றவர்கள் போலவே வரிசையில் நிற்க வேண்டும் என்கி றார்கள். மாற்றுத்திறனாளிகளும் வேறுவழியின்றி இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றுதான் மனு அளித்து வந்தோம். ஆட்சியர் கனிவோடு குறைகளை கேட்கிறார். ஆனால் அதி காரிகள் எரிச்சலுடன் பேசுவதைத் தான் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்து ஆட்சியரை சந்தித்து தனியாக புகார் அளிப்பது என சங்கத்தின் சார் பில் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித் தார். முன்னதாக ஆட்சியரிடம் மனு  அளிக்க அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் பங்கஜவல்லி, சிவகாமி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.