திருப்பூர், ஜன. 9 - பொங்கல் பண்டிகையை முன் னிட்டு திருப்பூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஜனவரி 11ஆம் தேதி (நாளை) முதல் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைத்து போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்படுவதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணை யர் வியாழனன்று விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பொங் கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூ ரில் வரும் சனிக்கிழமை (11ஆம் தேதி) பிற்பகல் முதல் புறநகரப் பேருந்து போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி திருப் பூரில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு சிவன் தியேட்டர் அருகே புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந் துள்ள மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட கரூர், திருச்சி, தஞ்சா வூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி, அறந்தாங்கி, ஜெயங் கொண்டம், சிதம்பரம், பட்டுக் கோட்டை, மயிலாடுதுறை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, திருத் துறைபூண்டி ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மேற்கண்ட தற் காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதேபோல் மதுரை மற்றும் திண் டுக்கல் மார்க்கமாக செல்லும் பேருந்து கள் அனைத்தும் வழக்கமாக புதிய பேருந்து நிலையத்திலேயே செயல் படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி, இராமநாத புரம், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய வெளியூர்க ளுக்கு செல்லும் பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்தையே பயன் படுத்திக் கொள்ளலாம். கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. கோவை, அவிநாசி, மேட்டுப்பாளை யம், நீலகிரி, கோத்தகிரி ஆகிய வெளி யூர்களுக்கு செல்லும் பயணிகள் மேற் கண்ட தற்காலிக பேருந்து நிலையத் திற்குச் செல்ல வேண்டும். ஈரோடு, சேலம் மார்க்கமாக செல் லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்து வெளி யில் வரும் இடமான ரவுண்டானா விற்கு அருகில் (கல்யாணி பெட்ரோல் பங்க் எதிரில்) தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அந்த தற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.