tamilnadu

img

வெள்ளகோவில் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரக்கோரி வட்டாட்சியரிடம் மனு

திருப்பூர், மே 6 –திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் அருகே காவிலிபாளையம் பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குசெய்யும் இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அந்த இடத்தை மீட்டுத்தரும்படி காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில்கூறியிருப்பதாவது, வெள்ளகோவில் ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 40 குடும்பங்கள் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தில் வீடு கட்டி, 3 தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ளபொது இடத்தை இறந்தவர்களின் சடலங்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அருகில் இரு நபர்கள் அரசின் இலவச வீட்டுமனைப் பட்டாபெற்று, வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். மக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு பயன்படுத்தி வரும் பொது இடத்தை அந்த இருவரும் ஆக்கிரமித்து, குடிசை அமைத்து வருகின்றனர். எனவே, அந்த இடத்தை மீட்டுத் தர காங்கயம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.