அவிநாசி, ஆக.22- பெருமாநல்லூரில் தரை மட்ட குடிநீர்த் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயி ரிழந்தார். பெருமாநல்லூர் ஈஸ்வ ரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (33), கட்டடத் தொழிலாளி. இவ ரது மனைவி லட்சுமி (30), பனியன் தொழிலாளி. இவர் களுக்கு தரணிகா (9) என்ற மகளும், சுஜித் (7) என்ற மக னும் உள்ளனர். தம்பதியர் வழக்கம்போல் வேலைக் குச் சென்ற நிலையில், குழந் தைகள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந் துள்ளனர்.
மாலை வீடு திரும்பிய தம்பதியினர், சிறு வன் சுஜித் வீட்டில் இல்லா ததைக் கண்டு இரவு முழுவ தும் தேடியுள்ளனர். பின்னர் சனியன்று அதிகாலை தரை மட்டத் தொட்டியைப் பார்த்தபோது சிறுவன் சுஜித் நீரில் மூழ்கி உயிரி ழந்தது தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.